Friday, May 3, 2024
-- Advertisement--

நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் அதிர்ச்சி…!!!

நீட் தேர்வில் இடம் பெற்ற கேள்வித்தாளில் இயற்பியல், வேதியியல் பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் மிகவும் கடினமாக இருந்தது என்று மாணவ, மாணவியர் அதிர்ச்சி அடைந்தனர். நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ், பல்மருத்துவம் ஆயுஷ் இளநிலை பட்டப்படிப்பில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கான நுழைவுத் தேர்வு நேற்று நடந்தது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, ஒரியா, பெங்காலி, தெலுங்கு, கன்னடம், உருது உட்பட 13 மொழிகளில் கேள்வித்தாள் இடம் பெற்றிருந்தது.

ஆங்கிலம் மற்றும் இந்தியில் கேள்வித்தாள் அனைத்து நகரங்களில் அமைந்துள்ள தேர்வு மையங்களிலும் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழ் மொழியிலான கேள்வித்தாள்கள் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள. தேர்வு மையங்களிலும் ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி கேள்வித்தாள்கள் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும், ஆங்கிலம், உருது கேள்வித்தாள்கள் அனைத்து தேர்வு மையங்களிலும் வழங்கப்பட்டன.

இந்த தேர்வு இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் இருந்து 180 கேள்விகள் இடம் பெற்றன. நீட் தேர்வு நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது. தேர்வில் இடம் பெற்ற கேள்வித்தாளில் இடம் பெற்ற இயற்பியல், வேதியியல் பாடப் பகுதிக்கான கேள்விகள் மட்டும் கடினமாக இருந்தது. 35 கேள்விகள் மட்டும் சாய்ஸ் அனுமதிக்கப்பட்டன.

சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் தவறான விடைக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு நீட் தேர்வை விட இந்த ஆண்டுக்கான நீட் தேர்வில் கேள்வித்தாள் எளிமையாக இருந்தது என்று சில மாணவர்கள் தெரிவித்தனர். பெரும்பாலான மாணவர்கள் கடினமாக இருந்ததாக தெரிவித்தனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles