பிரியங்கா மஸ்தானி டிக் டாக்கில் ஏராளமான ரசிகர்களை வைத்திருந்த இவர் சேலம் பொண்ணு, தாம்பரத்தில் உள்ள கல்லூரியில் படித்துக் கொண்டே அடிக்கடி ஏதாவது க்யூட் வீடியோக்கள் வெளியிட்டு வருவார். இன்ஸ்டாவில் இவருடைய வீடியோக்கள் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கடந்துள்ளது. Intsa Reels கொடுத்த பிரபலத்தால் பட வாய்ப்பு விளம்பர படங்கள் என்று அடுத்தடுத்து பிரியங்காவிற்கு வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தது. வர வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட பிரியங்கா தற்பொழுது பல நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்கள் வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.
செல்போனில் எக்குத்தப்பான படம்:
சமீபத்தில் மீடியா ஒன்றுக்கு பேட்டி கொடுத்த பிரியங்கா ரயில் பயணத்தில் தனக்கு நடந்த பாலியல் தொந்தரவை பற்றி மனம் திறந்து பேசி இருந்தார். அதில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நான்கு நாள் நான் மெரினாவில் தான் இருந்தேன் அப்போது கோடம்பாக்கத்தில் தங்கி இருந்தேன். லோக்கல் ட்ரெயினில் பயணம் செய்த போது இடமில்லாததால் கிடைக்கும் இடத்தில் அமர்ந்தேன் அப்போது வயதான ஒருவர் என் அருகில் அமர்ந்து இருந்தார் அவர் திடீரென்று செல்போனில் ஆபாச வீடியோவை பார்த்துவிட்டு எனக்கு காண்பிக்க முயற்சி செய்தார். அந்த வீடியோவை எனக்கு காண்பிப்பதற்காக செல்போனை திருப்பி வைத்தார் அதை பார்த்த எனக்கு டென்ஷன் ஆகிவிட்டது.
எனக்கு இதுபோன்ற செயல்கள் கண்டால் கோபம் தான் வரும் அந்த நேரத்தில் அவருடைய செல்போனை வாங்கி ஓடிக்கொண்டிருக்கும் ரயில் ஜன்னலில் தூக்கி வீசிவிட்டேன் அவரும் அமைதியாக ஒன்றும் சொல்ல முடியாமல் இருந்தார். அடுத்த ஸ்டேஷன் வந்தவுடன் சைலண்டாக இறங்கி சென்று விட்டார் என்று கூறியவர்.
அந்த செயல் செய்தவரை செருப்பால் அடித்தேன்:
தனக்கு நேர்ந்த இன்னொரு சம்பவத்தையும் கூறியிருந்தார். அப்போது நான் சைதாப்பேட்டையில் தங்கியிருந்தேன் தாம்பரம் போவதற்காக ரயிலில் பயணம் செய்தபோது செம போதையில் ஒரு நபர் வந்தார். பார்த்து கொண்டே இருந்தார் சிக்னல் கொடுத்தும் நாங்கள் பார்க்காததால் டென்ஷனான அந்த நபர் அவ்வளவு அவ்வளவு திமிரா டி உங்களுக்கெல்லாம் நீங்க எல்லாம் பணம் இருந்தா தான் வருவீங்க என்று ரயிலிலே கூறினார். டென்ஷனான நான் ரயிலை விட்டு இறங்கியதும் அந்த நபரை துரத்திக் கொண்டு போய் செருப்பால் அடித்தேன் தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் படிக்கட்டில் நான் அவரை அடித்துக் கொண்டிருக்கிறேன் அனைவரும் அதை வீடியோ எடுத்துக் கொண்டார்கள் அதைப் பார்க்கும் போது தான் எனக்கு கஷ்டமாக இருந்தது ஒரு பெண்ணுக்கு இப்படி நடந்து விட்டது என்று அனைவரும் வந்து நியாயம் கேட்பார்கள் என்று பார்த்தால் அதனை வீடியோ எடுத்தார்கள்.
ஒரு 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஓடிவந்து அவன் தான் முதலில் அடித்தான் அடித்தவுடன் அதன் பிறகு ஒரு சிலர் வந்து அவனை அடித்து விரட்டினார்கள் என்று தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு பற்றி கூறியுள்ளார் மாடல் டிக் டாக் பிரபலம் பிரியங்கா.