Sunday, May 19, 2024
-- Advertisement--

தமிழக முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து உருக்கமான கோரிக்கை வைத்த பேரறிவாளன்..!!! ஸ்டாலின் கூறிய ஆறுதல்.

பேரறிவாளன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பரோலை நீடிக்க கோரி பேரறிவாளன் அவர்களது தாய் அற்புதம்மாள் இன்று முதல்வரை சந்தித்தார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறார் பேரறிவாளன். அவருடன் மொத்தம் 7 பேர் இந்த வழக்கு தொடர்பாக சிறையில் இருக்கின்றனர். சமீபத்தில் பரோலில் வெளி வந்த பேரறிவாளன் வெளிவந்த நாள் தற்பொழுது முடிய போகும் நேரத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களிடம் பரேலை நீடிக்க கோரி கோரிக்கை ஒன்றை வைத்தார் பேரறிவாளன் அவர்களின் தாயார் அற்புதம்மாள்.

திமுக அதிமுக எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் அந்த ஏழு தமிழர்களின் விடுதலை கோரி தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அந்த 7 தமிழர்களை விடுதலை செய்யலாம் என்று கூறியுள்ளது.

அதனை கருத்தில் கொண்டு இதற்கு முன் ஆட்சியில் இருந்த அதிமுக அந்த 7 தமிழர்களையும் விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இடம் அனுப்பிவைத்தது ஆனால் அவரோ அதை ஏற்க மறுத்து விட்டார்.

இவர்கள் விடுதலை குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கில்லை குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உண்டு என்று கூறியிருந்தார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்க்கும் கடிதம் எழுதியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடிதம் எழுதியுள்ளார் அதனைத் தொடர்ந்து 16 -5 2001 அதாவது நாளை பிரதமரை சந்திக்கும் போது இந்த 7 பேர் விடுதலை பற்றி பேச உள்ளதாக கூறப்படுகிறது.

இன்று தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து 30 நாள் தனது மகனை பரோலில் வெளியே அனுப்பியதற்கு நன்றி என் மகனின் உடல்நிலை சரி இல்லை எதிர்ப்பு சக்தி இல்லை அவருக்கு சரியான மருத்துவம் கொடுக்க வேண்டும் மேலும் பரோல்லை நீடிக்கக்கோரி கோரிக்கை ஒன்றையும் வைத்தார். நீங்கள் என்ன உணர்வோடு இருக்கீர்களோ அதே உணர்வோடு நானும் இருக்கிறேன் என்று ஆறுதல் கூறி உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles