Thursday, May 2, 2024
-- Advertisement--

கைதியாக ஜெயிலிற்கு போக வேண்டுமா ஒரு நாளிற்கு ரூபாய் 500 போதும்..!!! அமுலுக்கு வர இருக்கும் புதியத்திட்டம்.

கர்நாடகாவில் ஒரு சிறையில் ரூ.500 கொடுத்தால் ஒரு நாள் முழுவதும் கைதியாக வாழும் திட்டம் அமல்படுத்தபட உள்ளது.

பொதுவாக சிறையில் இருப்பவர்களுக்கு 3 மணி நேரமும் தவறாமல் உணவு வழங்கப்படும். இதனால் வெளியில் இருப்பதை விட சிறையில் இருந்து விடலாம் என்று பலர் விளையாட்டாக கூறுவது உண்டு. மணி அடித்தால் 3 நேரமும் சாப்பாடு கிடைத்து விடும் என்று சிலர் கூறுவதை நாம் கேள்வி பட்டு இருக்கிறோம். இந்நிலையில் கர்நாடகத்தில் உள்ள ஒரு சிறையில் ரூ.500 கொடுத்தால் ஒரு நாள் முழுவதும் கைதியாக வாழும் திட்டம் அமல்படுத்தபட உள்ளது.

முதல்வன் படத்தில் அர்ஜூன் ஒரு நாள் முதல்வராக நடித்தது போல, ஒரு நாள் கைதியாக வாழ ஆசைப்படுவபர்கள் இந்த சிறைக்கு சென்று வரலாம்.

பெலகாவியில் ஹிண்டல்கா சிறை உள்ளது. இந்த சிறையில் விசாரணை கைதிகள், ஆயுள் தண்டனை கைதிகள் என 500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த சிறையில் தான் ரூ.500 கட்டணம் செலுத்தினால் ஒரு நாள் முழுவதும் கைதியாக வாழும் திட்டத்தை அதிகாரிகள் அமல்படுத்த உள்ளனர்.

இதுகுறித்து அந்த சிறையின் அதிகாரிகள் கூறும் போது:

ரூ.500 கட்டணம் செலுத்தி ஒரு நாள் முழுவதும் சிறையில் கைதியாக தங்கும் திட்டத்தை அமல்படுத்த முடிவுசெய்து உள்ளோம். இதற்காக அரசின் அனுமதியை எதிர்பார்த்து உள்ளோம் . இங்கு தங்க வருபவர்களுக்கு சீருடை, கைதி எண், கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு ஆகியவை வழங்கப்படும். அவர்களும் கைதிகள் போலவே நடத்தப்படுவார்கள்.

அவர்களுக்கு எந்த சலுகைகையும் அளிக்கப்படாது. இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் நோக்கம் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்க தொடங்கப்பட்டு உள்ளது. கைதிகள் வாழ்க்கை குறித்து மக்க ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த திட்டம் தொடங்க பட உள்ளது என்று கூறியுள்ளனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles