நாடெங்கும் மக்கள் கொரோனா நோயினால் அதிகமாக பாதிக்க படும் வரும் நேரத்தில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது பெரும் வருத்தத்தை தருகின்றது.
கொள்ளை எப்படி நடக்கிறது விளக்கம்
கொரோனா பாதிப்பால் மக்களிடம் பணம் புழக்கம் குறைவாக இருக்கும் என்பதை கருதி வங்கிகளுக்கு கடன் மற்றும் EMI கட்டுபவர்கள் மூன்று மாதங்கள் அவகாசம் எடுத்து கொண்டு கட்டலாம் என்று அறிவிப்பு வந்து இருந்தது.
உங்களது தொலைபேசி எண்ணிற்கு கால் செய்வார்கள் நாங்கள் வங்கியில் இருந்து பேசுகிறோம் உங்களது EMI மூன்று மாதங்களுக்கு கட்ட தேவையில்லை உங்கள் போனில் ஒரு OTP வரும் அதை மட்டும் சொல்லுங்கள் என்றால் தயவு செய்து அந்த OTP எண்ணை அவர்களிடம் சொல்லிவிடாதீர்கள். அந்த எண்ணை சொன்ன உடனே உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் திருடிவிடுவார்கள். எந்த வங்கியிலும் இது போன்று கால் செய்து OTP எண்ணை கேட்கமாட்டார்கள்.
சமீபத்தில் இது போன்ற சம்பவம் குறித்து ரூபா IPS அவர்கள் ட்வீட் செய்து உள்ளார்.
தயவு செய்து இது போன்ற நேரத்தில் நாம் தான் உஷாராக இருக்க வேண்டும்