Friday, April 26, 2024
-- Advertisement--

சக்கரை நோய் வருவதற்கு பரோட்டா முக்கிய காரணமா…? உஷார் மக்களே..!!!

மைதா நமது இந்திய நாட்டின் பாரம்பரிய உணவு இல்லை ஆனாலும் இன்றும் மைதாவால் தயார் செய்யப்படும் பரோட்டாவை நாம் ருசித்து வருகிறோம். ஆனால் இன்று எத்தனை பேருக்கு தெரியும் மைதாவால் என்னனா பிரச்னைகள் வருகிறது என்று.

நம் முன்னோர்கள் காலத்தில் சக்கரை நோய் என்பது வயதான பின் தான் வரும் சில பேருக்கு சக்கரை நோய்யே இருக்காது ஆனால் இந்த காலத்தில் பிறந்த குழந்தைக்கு சக்கரை நோய். இளம் வயதிலே சக்கரை நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படும் வருகிறார்கள். சக்கரையை கட்டுக்குள் வைக்க விடாமல் செய்யும் உணவு தான் மைதாவால் ஆன பரோட்டா.

கொழுப்பு படிதல், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், நிரிழிவு நோய் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் இளம் வயதிலேயே .வருவதற்கு மைதாவும் முக்கிய காரணம்.

மைதா என்பது இயற்கையாக கோதுமையிலிருந்து உருவாக்கப்படும் மாவு அல்ல. செயற்கையாக பலவிதமான கோதுமையில் இரசாயனத் தாக்குதல்களை நடத்தி உருவாக்கப்படும் மெல்லிய மாவு. இதை பிளீச் செய்யப் பயன்படும் இரசாயன பொருள், நீரிழிவு நோயை உருவாக்கும் தன்மை கொண்டது.

இரண்டாம் உலக போர் ஏற்பட்ட போது கோதுமை தட்டுப்பாட்டை ஈடுகட்ட மைதாவை உணவாக எடுத்து கொண்டார்கள்.

உடலுக்கு தேலையான நார்ச்சத்து இல்லாமலிருப்பதால் மலச்சிக்கலை மைதாவுக்கு முக்கிய பங்கு உண்டு. குடல் பகுதியில் பசைபோல உருவாகி தடங்கலை செரிமானத்துக்கு ஏற்படுத்துவதால் மைதாவை “glue of gut” என்று அழைக்கின்றனர். குடலின் இயக்கத்தை மந்தமாக்கி மலச்சிக்கலை உண்டாக்கும்.

ஐரோப்பா சீனா லண்டன் ஆகிய நாடுகளில் மைதாவை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டு உள்ளது. நாம் தான் இன்னும் மைதாவை சுவைக்க மறக்கமுடியாமல் தவிக்கிறோம்.

மது அருந்தாமல் மற்றும் புகைபிடிக்காமல் இருக்கிறேன் எனக்கு எப்படி சக்கரை நோய் வந்தது எனக்கு எப்படி புற்று நோய் வந்தது என்று நோய் வந்த பின் நம்மை நாமே பரிசோதித்து கொள்ளாமல் நோய் வருவதற்கு முன்பே தவறான உணவு பழக்கத்தை கைவிட வேண்டும். மைதா மற்றும் மைதாவால் செய்யும் பரோட்டாக்களை முடிந்த வரை தவிர்ப்போம்.

பரோட்டா தொடர்ந்து சாப்பிட்டால் விரைவில் சக்கரை நோய் வர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளிவந்து உள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles