விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் என்ற தொடரில் முல்லை என்ற கதாபாத்திரம் பெரிய பிரபலமானது காரணம் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த VJ சித்ரா தான்.
VJ சித்ராவின் சுட்டித்தனமான நடிப்பு அந்த கதாபாத்திரத்தை தாங்கிப் பிடித்திருந்தது அதுமட்டுமல்லாமல் அந்த சீரியலில் வரும் கதிர் முல்லை கதாப்பாத்திரத்தின் கெமிஸ்ட்ரி சுவாரசியமாக இருந்ததால் அனைவரும் முல்லை கதாபாத்திரத்தை விரும்பி பார்த்து வந்தனர்.
விஜே சித்ராவின் திடீர் தற்கொலைக்குப் பிறகு யார் அந்த சீரியலில் முல்லையாக நடிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வந்தது. சித்ராவின் மறைவுக்குப் பிறகு முல்லை கதாபாத்திரத்தை நிறுத்தப்போகிறார்கள் என்ற செய்திகள் எல்லாம் வெளிவந்து ஆனால் சில நாட்களிலேயே முல்லை கதாபாத்திரத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த காவியா அறிவுமணி நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளிவந்தது.
விஜே சித்ரா அளவிற்கு காவியா நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்க ஓரளவிற்கு காவியாவும் முல்லை கதாபாத்திரத்தில் முட்டுக் கொடுத்து நடித்து வந்தார்.
காவியா அறிவுமணி அடிக்கடி ஏதாவது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு தன் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பது வழக்கம் சமீபத்தில் அவர் வெளியிட்ட மார்க்கமான புகைப்படத்தை பார்த்து முல்லையா இது என்று வாய் பிளந்து வருகிறார்கள். அந்த அளவிற்கு தாராளம் காட்டி வருகிறார் புது முல்லை காவியா.