Monday, May 20, 2024
-- Advertisement--

தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு..!!! விருது பெறுவோரின் பட்டியல் இதோ..!!! இணையத்தில் குவியும் வாழ்த்துக்கள்.

ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கும் பத்ம விருதுகள் யார் யார் என்று இன்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது மொத்தம் 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 10 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். தமிழகத்தை சார்ந்தவர்களுக்கு 10 விருது அறிவிக்கப்பட்டது பெரும் மகிழ்ச்சியை தமிழக மக்களிடம் ஏற்ப்படுத்தி உள்ளது.

பத்மஸ்ரீ விருது பெற உள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பட்டியல் இதோ

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் நடுவர் திரு சாலமன் பாப்பையா அவர்கள் பத்மஸ்ரீ விருதை பெற உள்ளார்.

தென்காசியில் இருந்து ZOHO ITநிறுவனத்தை நடத்திவரும் ஸ்ரீதர் வேம்புவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவித்து உள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த கூடைப்பந்து வீரர் அனிதா அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவித்து உள்ளனர்.

தமிழக கிராமிய இசைக் கருவிகளில் வில்லுப்பாட்டு கலை ஒரு சிறந்த அங்கமாக வகிக்கிறது. வில்லுப்பாட்டு கலையை உலகளாவிய கொண்டு சேர்த்த கவிஞர் சுப்பு ஆறுமுகம் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

105 வயதிலும் விவசாயம் செய்து வரும் இரும்பு மனுஷி பாப்பம்மாள் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

கே.சி சிவசங்கர்- கலைத்துறை

மராச்சி சுப்புராமன்- சமூக சேவை

சுப்பிரமணியன்- வர்த்தகம் மற்றும் தொழில்துறை

பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத்- கலைத்துறை

மராச்சி சுப்புராமன்- சமூக சேவை

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles