கொரானோ வைரஸ் கோவிட்-19 தொற்று காரணமாக உலக நாடுகளில் அதை கட்டுப்படுத்தும் விதமாக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இதன் காரணமாக அத்தியாவசிய வாகனங்கள் மட்டுமே செல்வதால் உலக அளவில் கற்று மாசுபாடு குறைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் ஓசோன் படலத்தில் உள்ள மிக பெரிய துளை தானாக மூடி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதை விஞ்ஞானிகளும் தெரிவித்துள்ளனர்.
இதற்கு ஊரடங்கு உத்தரவு தான் காரணம் என்றும், காற்று மாசுபாடு குறைந்தது தான் காரணம் என்றும் வதந்திகள் பரவி வருகின்றன. இதை முற்றிலுமாக மறுத்துள்ள பூமி கண்காணிப்பு நிறுவனமான கோப்பர்னிக்கஸ் வளிமண்டல கண்காணிப்பு சேவை (CAMS ) நிறுவனம் இதற்கு விளக்கமும் அளித்துள்ளதுடன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அதில் ஓசோன் துளை உண்மையில் கொரானோ வைரஸ் தொடர்பான ஊரடங்கு நிலை எந்தவித தொடர்பும் கொண்டிருக்கவில்லை, மாறாக, வழக்கத்திற்கு மாறாகவும் வலுவான மற்றும் நீண்ட கால துருவ சூழல் காரணமாக ஏற்பட்டது எனவும் ட்விட் செய்துள்ளது.