Friday, May 3, 2024
-- Advertisement--

சென்னைக்கு வர இருக்கும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகை ஓவியா..!!! இணையத்தில் குவியும் கமெண்ட்ஸ்.

தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்து இறங்கும் பிரதமர் மோடியை வரவேற்க தமிழக ஆளுநர் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் வரவேற்க உள்ளனர்.

விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கடற்படை தளத்திற்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு நடைபெற இருக்கும் விழாவில் கலந்து கொண்டு அர்ஜுன் ரக பீரங்கி ராணுவத்திடம் ஒப்படைக்கிறார்.

பிரதமரின் வருகையை ஒட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சென்னை மெட்ரோ ரயில் சேவையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் இந்த திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு பிரதமர் மோடி அவர்கள் தனி விமானம் மூலம் மதியம் 1 .30மணிக்கு கேரளா செய்கிறார்.

பாஜகவினர் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் இந்த நிலையில் மோடிக்கு ஆதரவாக ஒரு பக்கம் இருக்க மோடிக்கு எதிராக மற்றொரு பக்கம் குரல் கொடுத்து வருகின்றனர் மக்கள்.

பிரதமர் மோடி சென்னைக்கு வருவதை எதிர்த்து #GoBackModi என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் பெரிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. பிரதமர் சென்னைக்கு வருவதை எதிர்த்து இதுபோல ஹேஸ்டேக் ட்ரெண்டை ஆகி வரும் இந்த நிலையில் நடிகை ஓவியா அதற்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் கோபேக்மொடி என்ற ஹேஸ்டேக் பதிவிட்டுள்ளார் இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் எக்கச்சக்க லைக் போட்டு வருகின்றனர்.

ஓவியாவின் இந்த செயலை பார்த்த ரசிகர்கள் என்ன தில்லு யா அந்த பொண்ணுக்கு என்று கமெண்ட் செய்து வருகின்றனர். மற்றொரு பக்கம் பிரதமரை வரக்கூடாது என்று கூறுவது மிகப்பெரிய தவறு என்று கருத்தையும் பதிவிட்டு வருகிறார்கள் மக்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles