Friday, May 17, 2024
-- Advertisement--

பயில்வான் ரங்கநாதன் பாலியல் துன்புறுத்தல் செய்தாக ஓவியா குற்றச்சாட்டு…!!! அவரே வெளியிட்ட வீடியோ.

பயில்வான் ரங்கநாதன் தமிழ் சினிமாவிற்கு முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் முதலில் காவல் துறையில் சேர்ந்து பணியாற்ற விரும்பிய பயில்வான் உடலை கட்டுக்கோப்பாக வைத்து மிஸ்டர் சென்னை பட்டத்தை பெற்றார்.

இவரது உடல் வாகைப் பார்த்து எம்ஜிஆர் அவர்கள் தான் முதன் முதலில் இவரை பயில்வான் என்று அழைத்தாராம் அதன் பிறகு அதை அடைமொழியாக வைத்துக் கொண்டாராம் ரங்கநாதன் இப்படித்தான் ரங்கநாதன் பயில்வான் ரங்கநாதன் ஆனாராம். அதனைத் தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் நடித்து வந்த அவர் திரைப்படங்கள் பற்றி விமர்சனமும் இதழ்களில் பத்திரிகையாளராகவும் பணியாற்றி வந்தார்.

சினிமாவில் உண்மையாக நடந்த நிகழ்வுகள் என்று அனைத்து நிகழ்வுகளையும் யூடியூப் சேனல்களில் பகிர்ந்து கொண்டு வருகிறார் பயில்வான் ரங்கநாதன் அவர் பேசுவதை மக்கள் ஆர்வமாக பார்க்கின்றனர். அவர் சொல்கின்ற விஷயங்கள் அனைத்தும் ஆச்சரியமாகவும் கேள்விப்படாத விஷயங்களாக இருப்பதால் மக்கள் தொடர்ந்து இவர் பேசுவதை யூடியூபில் கேட்டு வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் பயில்வான் ரங்கநாதன் வருமானம் நன்றாக வருகிறது என்று ஒவ்வொரு யூடியூப் சேனலுக்கு நேரடியாக சென்று சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றியும் அவர்களது வாழ்க்கை பற்றியும் பேசி வந்தார்.

பயில்வான் ரங்கநாதன் மறைமுகமாக எதையும் சொல்லாமல் ஓபன் ஆக நடிகர் நடிகைகளின் உறவுகள் மற்றும் பாலியல் தொந்தரவுகள் மற்றும் சினிமா அப்டேட் அனைத்தையும் தெரிவிப்பார் அந்த வகையில் பயில்வான் அவர்கள் பிரபல நடிகை ஓவியா பற்றி ஒரு யூடியூப் சேனலில் கூறியிருக்கிறார் அதில் ஓவியா பத்தி என்ன சொல்றது அவரை வெள்ளந்தி என்று சொல்வதா இல்லை பெண் சுதந்திரம் என்று சொல்வதா.

ஓவியாவை பொருத்தவரை ஆமா நான் தண்ணி அடிப்பேன் யாரை வேணும்னாலும் காதலிப்பேன், பப்புக்கு போவேன் என்று ஓப்பனாக பேசக்கடியவர் என்று கூறிய அவர் மகாபலிபுரத்தில் அவர் தங்காத ஹோட்டல்லே கிடையாது அந்த அளவிற்கு ஓவியா எல்லா இடங்களிலும் தங்கி இருக்கிறார் ஓவியா நடிப்புடன் சேர்ந்து அட்ஜஸ்ட்மெண்ட் செய்திருந்தால் பரவாயில்லை அட்ஜஸ்ட்மெண்ட் மட்டும் செய்து சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் வந்ததால் தான் ஓவியாவின் மார்க்கெட் இப்படி உள்ளது என்று குதர்க்கமாக பேசியிருநதார்.

அந்த வீடியோவை பார்த்த சிலர் ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க என்று கேட்டாலும் பலர் சினிமாவில் நடந்த உண்மையை தானே சொல்கறார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். பயில்வான் பேசிய வீடியோவை பார்த்த பிரபல நடிகை ஓவியா அந்த வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இதுவும் ஒரு வகையான பாலியல் துன்புறுத்தல் தான் என்று பதிவிட்டுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles