Monday, May 6, 2024
-- Advertisement--

படையெடுக்க தயாராகும் திமுக..!!! ஒரே நாளில் ஆன்லைன் வழியாக சேர்ந்த 30000 உறுப்பினர்கள்.

திமுகவின் முப்பெரும் விழா கொண்டாட்டத்தை பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில் “எல்லோரும் நம்முடன்” என்று உறுப்பினர் ஆன்லைன் சேர்க்கை நேற்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

திமுகவில் உறுப்பினராக சேர விரும்புவோர் மிக எளிதாக இணையத்தளம் வழியாக சேரும்படி இந்த திட்டத்தை உருவாக்கியுள்ளனர். இந்தத் திட்டத்தில் 18 வயது நிறைவடைந்த யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

திமுகவில் உறுப்பினராக சேர: https://www.dmk.in/joindmk/

இதற்கு எந்த ஒரு கட்டணமும் செலுத்த தேவையில்லை. கடந்த 24 மணி நேரத்தில் ஆன்லைன் மூலமாக திமுகவில் 30,000 அதிகமானோர் உறுப்பினராக இணைந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இனிவரும் அடுத்தடுத்த நாட்களில் இதன் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று திமுக கட்சியினர் எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று நாட்களில் மொத்த புதிய உறுப்பினர்கள்: 65,790

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles