Saturday, May 4, 2024
-- Advertisement--

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மேலும் ஒருவர் தற்கொலை .!!! தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ஓ பன்னீர்செல்வம் வேண்டுகோள்.

நீட் தேர்வினால் ஏதாவது தற்கொலை செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது. நீட் வேண்டாம் என தமிழக அரசு ஒரு பக்கம் குரல் கொடுத்து வருகிறது.

இந்நிலையில் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வடகுமரை ஊராட்சியை சேர்ந்த திரு கணேசன் என்பவரின் மகன் சுபாஷ் சந்திர போஸ் என்பவர் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் பூச்சி மருந்து குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வரும் நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஓபிஎஸ் அவர்கள் கூறியிருப்பது இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதி குறைந்த மதிப்பெண் பெற்ற நிலையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற தன் காரணமாக நான்கு நாட்களுக்கு முன்பு பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாணவர் சந்திரபோஸ் அவர்கள் குடும்பத்திற்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் இந்த செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையாக இருந்தது. தன் உயிரை மாய்த்துக் கொண்ட செல்வன் சுபாஷ் சந்திர போஸுக்கு எனது அஞ்சலி செலுத்துவதோடு அவரது பெற்றோர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று மாணவ மாணவிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

நீட் தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே 3 பேர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் நீட் தேர்வு முடிவு வெளிவந்த பிறகு நான்காவதாக சுபாஷ் சந்திரபோஸ் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இதுபோன்ற தொடர் இழப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசு விரைந்து எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles