கொல்கத்தாவை சேர்ந்த ஒரு இளம் பெண் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை கணவர் ஒருவர் கையெழுத்திட்டு மருத்துவமனையில் சேர்த்தார். இந்த இளம் பெண்ணிற்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
ஆனால் பிறந்த குழந்தைக்கு நான் தான் அப்பா என்று இரண்டாவதாக ஒருவர் வந்து மருத்துவமனையில் கூறினார். அந்த இளம் பெண் பெயர் சப்னா, முதலில் மருத்துவமனையில் அனுமதித்தவர் தீபன் கர்பால், அடுத்ததாக ஹர்ஷா கேத்ரி மற்றும் பிரதீப் ராய் என்ற இருவரும் மருத்துவமனைக்கு வந்து நான் தான் அப்பா என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் குழம்பி போன மருத்துவமனை நிர்வாகம் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டது. போலீஸார் வந்து விசாரித்ததில் இரண்டாவதாக வந்தவர் தான் சப்னாவின் கணவர் என்பதும், அவர் தான் குழந்தைக்கு அப்பா என்றும் தெரிய வந்தது.
மேலும் மூன்றாவதாக வந்தவர் நண்பர் என்று சப்னா கூறியுள்ளார்.