உலகமே கொரானோ வைரஸால் பதிப்பிற்குளாகி உள்ளது. நாடெங்கும் கொரானோ வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி கொண்டிருக்கிறது. இதனால் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் வரையில் உலகெங்கும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஒரு நாள் என்று தொடர பட்ட ஊரடங்கு தற்போது ஒரு மாதத்தை கடந்து நீட்டிக்கபட்டுள்ளது. இதனால் அன்றாடம் பிழைப்போரின் வாழ்கை கேள்வி குறியாக உள்ளது. பலர் வீட்டில் இருப்பதை மிகவும் கஷ்டமான காரியமாக கருதுகின்றனர்.
இந்நிலையில் வீட்டில் இருப்பதை எவ்வாறு இனிமை ஆக்குவது என பல யோசனைகள் டிவிகளிலும், சோசியல் மீடியாக்களில் வலம் வந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில் ஒரு டீச்சர் குடும்பம் வீட்டில் கிரிக்கெட் விளையாடி பொழுதை கழிகின்றது. அம்மா டீச்சர் பால் போட அதை அப்பா பேட் செய்கிறார். இதனை படம் பிடித்தவாறே ரசிக்கின்றனர் மகன்கள். இதுமாதிரி விளையாடுவது. மனதிற்கு இதம் அளிப்பதோடு ஊரடங்கால் வரும் மனா உளைச்சலையும் இது குறைக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.