Friday, May 3, 2024
-- Advertisement--

பூஜை ஆரம்பித்த முதல் நாளிலே விஜயிடம் சேட்டை செய்த ராஷ்மிகா…!!! வெட்கத்தோடு சிரித்து கொண்டு நின்ற விஜய் கியூட் புகைப்படங்கள்.

குறுகிய காலத்திலேயே தன்னுடைய அழகாலும் அசத்தலான நடிப்பால் ரசிகர்கள் மனதை கவர்ந்த ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்கள் மனதையும் கவர்ந்தவர் ராஷ்மிகா. இவர் நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

நடிகை ராஷ்மிகா கன்னடம், தெலுங்கு, தமிழ் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.நடிகை ராஷ்மிகாவுக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் அது விஜய் தான். அவருடன் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என பல்வேறு பேட்டிகளில் வெளிப்படையாக கூறியுள்ளார் ராஷ்மிகா.

நடிகர் விஜய்யின் அடுத்த படமான விஜய் 66வது திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. இன்று பூஜையை தொடர்ந்து பாடல் பதிவு செய்யும் பணிகள் தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. நடிகர் கார்த்தி, நாகார்ஜுனா நடித்து வெளியான தோழா திரைப்படத்தின் இயக்குனர் வம்சி இப்படத்தை இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தின் ஒரு பாடல் பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் பாடல் காட்சியை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் திரைப்படம் படமாக்கப்பட உள்ளது.

மேலும் ராஷ்மிகா பேசுகையில் நீங்க ரொம்ப ஹேண்ட்சம்மா இருக்கீங்க சார் என சொல்லி நடிகை ராஷ்மிகா சுத்திபோட, இதைப் பார்த்து வெட்கப்பட்டு சிரித்துள்ளார் விஜய். இதுகுறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles