Sunday, June 2, 2024
-- Advertisement--

சிண்ட்ரெல்லா போல் அழகில் மெருகேற்றி நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட கலக்கல் புகைப்படங்கள்..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நிவேதா பெத்துராஜ். தற்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக பரவி வருகிறது.

நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த நல்ல புதுமுக நடிகை மதுரையை பூர்வீகமாக கொண்ட இவர் ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

அதைத்தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக டிக் டிக் டிக் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதோடு உதயநிதி ஸ்டாலினுடன் பொதுவாக என் மனசு தங்கம், விஜய் ஆண்டனியுடன் திமிரு புடிச்சவன் ஆகிய படங்கள் நடத்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

தமிழில் இவர் நடித்த படங்கள் மிகப்பெரிய ஹிட் அடிக்காததால் தெலுங்கு சினிமாவில் திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் அங்கேயும் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே வேறு வழி இல்லாமல் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு திரும்பினார்.

எப்படியாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையின் அந்தஸ்தைப் பெற வேண்டுமென சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார். மேலும் அடிக்கடி போட்டோ ஷூட் எடுத்த புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டு உள்ளார்.

தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவர் சமீபத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து நடித்த பொன் மாணிக்கவேல் படம் ஒடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. அதோடு வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி, விஷ்ணு விஷாலின் ஜெகஜால கில்லாடி என பல்வேறு படங்கள் ரிலீசுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles