Monday, May 6, 2024
-- Advertisement--

நிவர் புயலில் இருந்து பாதுகாத்து கொள்ள தமிழக மக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன..? விவரிக்கிறது இந்த குறிப்பு..!!

தற்பொழுது வங்க கடலில் புயல் மையம் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த புயலால் பல பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

இந்நிலையில் இதன்படி புயல் பெரும்பாலும் மக்களின் வீடுகளையும் சொத்துக்களையும் கடுமையாக சேதப்படுத்தும். இதுபோன்ற நேரங்களில் சாதகமாக செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். குடிக்க உகந்த நல்ல நீரை போதுமான அளவுக்கு பாதுகாப்பாக சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். புயல் வருவதற்கு முன்பு வீட்டின் கதவுகள் , ஜன்னல் கதவுகளை பழுதுபார்த்து வைத்திருக்க வேண்டும். வீட்டின் அருகில் உள்ள காய்ந்த மரங்கள் விளம்பரப் பலகைகள் போன்றவற்றை அகற்ற வேண்டும். அவசர காலம் மற்றும் அன்றாடம் தேவைப்படும் மருந்து பொருட்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.

பேட்டரியில் இயங்கும் டார்ச் லைட்டுகள், போதுமான பேட்டரிகள், பேரிச்சை, திராட்சை போன்ற உலர்ந்த பழ வகைகள், வறுத்த வேர்கடலை மற்றும் மூக்கடலை, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, மண்ணெண்ணெய் போன்றவற்றை போதுமான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.

இது மட்டுமல்லாது அடையாளங்களான ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் கல்வி சான்றிதழ்கள் சொத்து பத்திரங்கள் போன்றவற்றின் நீர் படாத வகையில் பிளாஸ்டிக் உரைகளை கொண்டு பாதுகாப்பாக வைக்க வேண்டும். புயல் கரையை கடக்கும் பொழுது குறைந்தபட்சம்24 மணி நேரம் வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது .

மரத்தடியில் வாகனங்களை நிறுத்துவது பாதுகாப்பானது அல்ல. புயல் கரையை கடக்கும் பொழுது வாகனத்தில் யாரும் வெளியே செல்ல வேண்டாம் . புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் திடீரென்று குறையும் இதனால் புயல் கரையை கடந்து விட்டதாக என்ன கூடாது.

மந்த நிலைக்குப் பின் மீண்டும் சூறைக்காற்று மிகவும் பலமாக வீசும், மீனவர்கள் கடலுக்கு செல்ல கூடாது படகுகள் அனைத்தும் தட்டாமல் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவேண்டும் . திறந்த வெளியில் இருப்பவர்கள் அருகில் உள்ள பாதுகாப்பு மையத்தில் செல்ல வேண்டும்.

பேட்டரி மூலம் இயங்கும் வானொலி பெட்டி அறிவிக்கப்படும் வானிலையின் நிலவரங்களை கேட்டு தெரிந்து கொண்டு அதன்படி செயல்பட வேண்டும். அவசர உதவிக்கு
மாநில எண் – :1070
மாவட்ட எண்: 1077

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles