Sunday, May 19, 2024
-- Advertisement--

கைலாசாவில் பொற்காசு முறையை நித்தியானந்தா அறிமுகப்படுத்தியுள்ளார்..! ஒரு பொற்காசுகளின் கிராம் மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நித்யானந்தாவின் கைலாச நாடு குறித்த அறிவிப்பை எதிர்பார்த்து ஏராளமானோர் காத்திருக்கிறார்கள். இதில் ரிசர்வ் பேங்க், தனி கரன்சி என அதிரடி காட்டி வந்துள்ளார் நித்தியானந்தா. நித்த நித்தம் ஒரு செய்திகளை வெளியிட்டு பரபரப்பின் உச்சத்தில் இருக்கிறார்.

விக்கிபீடியா, என்சைக்ளோபீடியா எல்லாத்தையும் ஓரம் கட்டும் விதமாகநித்தியானந்தாபீடியா வெளியானது. அவற்றின் அவற்றைப் பற்றிய தகவலை 1974 முதல் 2020 ஆம் ஆண்டு இன்றைய தேதி வரை அனைத்தும் சேகரித்து நித்யானந்தா வெளியிட்டுள்ளார் .அதில் தினம் தினம் நடக்கும் சத்சங்கம், போட்டோ ஷூட் என ஒன்றுவிடாமல் எல்லாமே அதில் இருக்கும் வகையில் நிரந்தர நித்யானந்தா வீடியோ வெளியானது.

இந்த பரபரப்பான சூழ்நிலையிலும் தனது கைலாச நாட்டில் கரன்சியை பற்றி நித்யானந்தா பேசியிருக்கிறார். அதில் கைலாச நாட்டின் கரன்சி காஸ்ட்லியானது என்றும் அது முழுக்க முழுக்க பொற்காசுகள் என்று சொல்லப்படும் ஆங்கிலத்தில் டாலர் என்றும் சமஸ்கிருதத்தில் ஸ்வர்ண முத்ரா, புஷ்ப முத்ரா எனவும் அதற்கு பெயர் வைத்திருக்கிறார் நித்யானந்தா. அந்த கைலாசாவின் கரன்சி தமிழ் பொற்காசுகள் என்று அழைக்கப்படும் அந்த பொற்காசுகளின் இன்றைய மதிப்பு தங்கத்தின் மதிப்பு 11.66 கிராம்.

இன்றைய தங்கத்தின் விலை 5 ஆயிரம் ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் ஒரு பொற்காசுகளின் மதிப்பு 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில் உலக நாடுகளையெல்லாம் திரும்பிப் பார்க்கும் வகையில் நித்யானந்தாவின் கைலாச நாடு உதயமாகிக் கொண்டிருக்கிறது. இந்து மதத்தை பின்பற்றும் 56 நாடுகளில் நித்தியானந்தாவின் கரன்சி பழக்கத்தில் இருக்குமாம்.

உள்நாட்டுக்கு ஒரு கரன்சி. வெளிநாட்டு புழக்கத்திற்கு மற்றொரு வகை கரன்சி என கூறுகிறார், நித்தி. இந்த நிலை நித்யானந்தா கைலாசம் குறித்த அதிரடி அறிவிப்புகள் எல்லாத்தையும் பல ஆண்டுகளாக தயாரித்து அதில் கைலாசத்தின் பொருளாதார அறிக்கையை எல்லாத்தையும் 8 சன்னியாசிகள் கொண்ட குழுவை வைத்து கடந்த இரண்டு வருடங்களாக பக்கா ப்ளான் ஓட நித்யானந்த தயாரித்து இருக்கிறார்.

இந்த நிலையில் கைலாச நாட்டின் ரிசர்வ் பேங்க் கரன்சி, பாஸ்போர்ட் என எல்லாமே தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி அசத்தி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles