நித்தியானந்தா கடந்த ஒரு வாரமாக புதிய பதிவுகளை தனது வலைத்தளத்தில் பதிவிட்டு வந்துள்ளார். அந்த வகையில் புதிதாக ரிசர்வ் வங்கியும் உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளார். அந்த ரிசர்வ் வங்கிக்கு ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசம் என்றும் பெயரிட்டுள்ளார். இது ஒருபுறமிருக்க திடீரென நித்யானந்தா பழைய மாதிரி வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
புதிய வீடியோவில் அவர் கூறியதாவது “கைலாஸாவில் நேரத்திற்கு உரிய கரன்சி நோட்டுகளும் தயாராக உள்ளது. உள் நாட்டிற்கு ஒரு கரன்சியும், வெளிநாட்டு பரிவர்த்தனைக்கு ஒரு கரன்சி நோட்டும் இருக்கிறது என்று கூறி ஆச்சிரிய படவைத்துள்ளது.
நிறைய நன்கொடைகள் கிடைத்திருப்பதால் நல்ல காரியத்திற்கு செலவிட வங்கியின் தொடங்கி உள்ளேன் என்று கூறியுள்ளார். வாடிகன் வங்கியைப் போலவே ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாஸா இருப்பதாகவும் கூறியுள்ளார். சட்டத்திற்கு புறம்பாக எதுவும் இருக்காது என்றும் 300 பக்க பொருளாதாரக் கொள்கையையும் தயாராக இருக்கிறது. விநாயகர் சதுர்த்தி அன்று முக்கிய அறிவிப்பை வெளியிடப் போகிறேன் என்றும் கூறினார்.
நித்யானந்தா தன்னை ஆட்டி என்றாலும் ஓகே தான் அதிபர் என்றாலும் ஓகே தான் என்று கூறியுள்ளார். சும்மாவே வெச்சு செய்வாங்க இனி கேக்கவா வேணும் என்று அனைவரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.