கைலாசாவில் ரஞ்சிதா மீது சீடர்கள் கடும் அதிருப்தி
இந்தியாவில் வழக்குகளில் தேடப்படும் சர்ச்சை சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடிய நிலையில் கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். சர்ச்சை பேச்சு மேலும், அந்த நாட்டிற்கான தனி பாஸ்போர்ட், ரூபாய் நோட்டுகள் மற்றும் கைலாசா சார்பில் பல்வேறு நாடுகளுக்கான தூதர்கள் என தனித்தனி பெண் சீடர்களையும் அறிவித்து பரபரப்பை எகிற வைத்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் கைலாசா சார்பில் பங்கேற்ற பெண் சீடர்கள் இந்தியா குறித்து பேசியது உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர்களது பேச்சு குறிப்பில் எடுத்துக்கொள்ளப்படாது என ஐ.நா. சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதன்பிறகு அமெரிக்காவில் சிஸ்டர் சிட்டி என்ற பெயரில் மெகா மோசடியில் ஈடுபட்டதாகவும் நித்யானந்தா மீது புகார்கள் எழுந்துள்ளது.
பிரதமர் ஆனார் ரஞ்சிதா:

இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் கைலாசா நாட்டின் பிரதமராக நடிகை ரஞ்சிதாவை நித்யானந்தா அறிவித்ததாக கைலாசாவின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கங்களில் அறிவிப்பு வெளியானது. நித்தியை போல ரஞ்சிதாவும் சொற்பொழிவு ஆற்றிய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியது. சமீப காலமாக ரஞ்சிதாவின் நடவெடிக்கைகள் கைலாஸாவில் சரி இல்லை என்று நித்தி சீடர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
டென்ஷன் ஆன சீடர்கள்:

ஆரம்ப நித்யானந்தாவுக்கு பணிவிடை செய்வதற்காக வந்தவர். மருந்து மாத்திரை எடுத்துகொடுத்தவர் எல்லாம் கைலாசாவில் தலைமை பொறுப்பிற்கு எப்படி வரலாம்… அவர் எங்களை போன்று கஷ்டப்பட்டாரா? அவர் பிரதமரா? என ஆதங்கத்துடன் பேசி வருகிறார்கள் சில சீடர்கள்.
நித்திக்கு சுத்தி வரும் தலைவலி:

தனக்கு எதிராக இதுபோன்று சில சீடர்கள் அதிருப்தியில் இருப்பதை அறிந்த ரஞ்சிதா தனக்கு என ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. சீடர்கள் மத்தியிலேயே இரு பிரிவாக செயல்படுவது நித்யானந்தாவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது .
நித்தி தலைமையில் ரஞ்சிதாவிற்கு பிரதமர் பதவி…!!! கைலாசாவில் ரஞ்சிதா சரி இல்லை சீடர்கள் அதிருப்தி..!!!