Saturday, April 27, 2024
-- Advertisement--

தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு. எதற்கெல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளது, முழு விபரம் உள்ளே.!!

தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்த அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

அதில் நேற்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு ஆயிரமாக உயர்ந்து. புதிதாக 2,731 பேருக்கு தொற்று உறுதியானது. இதை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா பரவலை தடுக்க இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராமகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து போக்குவரத்து கேளிக்கைப் பூங்காக்கள் செயல்பட தடை.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பொதுப்போக்குவரத்து இயங்காது, மெட்ரோ ரயில் பஸ் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டு தலங்களை முழுமையாக மூட உத்தரவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து கடைகளும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப் பட்டுள்ளது.

தொற்றை கட்டுப்படுத்த பேருந்து புறநகர் ரயில்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொடரை கட்டுப்படுத்த 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே நேரடி வகுப்புகள் நடத்தப்படும்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுகிறது.

அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடத்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது

பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles