Sunday, May 5, 2024
-- Advertisement--

சென்னை காவேரி மருத்துவமனையில் பிரபல செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்..!!!

அனிதா சம்பத் செய்தி வாசிப்பாளர் ஒருவருக்கு இவ்வளவு பெரிய கிரேஸ் இருக்கிறதா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு இருக்கிறது அனிதாவின் வளர்ச்சி. அனிதா செய்தி வாசிப்பாளராக பணியாற்றியபோது அவருக்காகவே டிவியில் செய்திகள் பார்த்த இளசுகளும் இருக்கிறார்கள்.

ஹோம்லியான அனிதா சம்பத்திற்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். அனிதா செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்த போது நிறைய படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

சூர்யாவின் காப்பான் படத்தில் சூர்யாவை பேட்டி எடுப்பது போல ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதுபோல தளபதி விஜயின் சர்கார் படத்தில் செய்தி வாசிப்பாளராக நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான விஜய்யின் மாஸ்டர் படத்திலும் செய்தி வாசிப்பாளராக நடித்திருப்பார்.

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனிதா சம்பத்திற்கு பிக்பாஸ் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தது அதனைத் தொடர்ந்து விஜய் டிவி பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கலந்துகொண்டு வின்னர் டைட்டிலும் பெற்றார்.

அனிதா பிரபலமானதால் கடை திறப்பு விழா மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு அனிதாவை அழைத்து வருகின்றனர். சமீபத்தில் வேர்ல்டு நியூட்ரிஷன் ஹெல்த் தினத்தை முன்னிட்டு காவேரி மருத்துவமனையில் நடைபெற்ற விழா ஒன்றுக்கு அனிதா சம்பத் கலந்து கொண்டார்

இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள் செவிலியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles