அனைவருக்கும் பரிச்சயமான நகைச்சுவை நடிகர் மற்றும் விமர்சகர் கூல் சுரேஷ் அவர்கள் செய்த ஒரு செயலால் நடிகர் மன்சூர் அலிகான் அவர்கள் மற்றும் படக்குழுவினர் கடும்கோபத்திற்கு உள்ளாகியுள்ளார்.
தற்பொழுது கிக் மற்றும் லியோ போன்ற படங்களில் நடித்து வரும் மன்சூர் அலிகான் அவர்கள் சரக்கு என்றும் படம் மூலமாக தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகனாக மாறியுள்ளார். இப்படத்தில் கூல்சுரேஷ் அவர்களும் நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது, அப்போது அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினி கூல் சுரேஷ் அவர்களை பேசுவதற்காக மேடைக்கு அழைத்த பொழுது அங்கிருந்தவர்கள் மலர் மாலை மற்றும் சால்வை அணிவித்தார்கள்.
மேடையில் பேசிய கூல் சுரேஷ் அவர்கள் அனைவரையும் மரியாதையுடனும் பரிவுடன் மேடைக்கு அழைக்கும் தொகுப்பாளினி அவர்களுக்கு யாரும் மாலை அணிவிக்கவில்லையே என்று சொல்லி தொகுப்பாளினிக்கு மாலையை அணிவித்தார்.
இந்த சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் மீண்டும் பேசிய கூல் சுரேஷ் தான் நல்ல நோக்கத்துடன் தான் மாலையை அணிவித்ததாக கூறினார் ஆனால் தொகுப்பாளினியோ கடும் கோபத்தில் இருந்தார்.
இவர் பேசிய பின்னர் மன்சூர் அலிகான் அவர்கள் மேடையில் பேசினார், அப்பொழுது கூல் சுரேஷ் அவர்களை தொகுப்பாளினியிடம் மன்னிப்பு கேட்க வைத்தார். அதற்கு மன்னிப்பு கேட்ட கூல் சுரேஷ் அவர்கள் இந்த மாலைஅணிவித்ததை ஒரு விளம்பரத்திற்காக தான் செய்ததாக ஒப்புக் கொண்டார்.
இந்த சம்பவத்தினால் கூல் சுரேஷ் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் சினிமா வட்டாரத்தினர்.