Saturday, May 4, 2024
-- Advertisement--

ஜாலியோ ஜிம்கானா பாடலின் ப்ரோமோவில் காமெடி நடிகர்களை அதகளம் செய்த நெல்சன்…!!!

தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து விஜய்யின் அடுத்தப் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவி உள்ளது. கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படத்தை எடுத்து வெற்றி கண்ட நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தற்பொழுது தளபதி விஜய் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் யோகிபாபு செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

பீஸ்ட் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தின் அரபி குத்து பாடல் வெளியாகி சமீபத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. பாடல் வெளியான 20 நாட்களில் 120 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

தற்போது பீஸ்ட் படத்தின் 2-வது பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது.அதன்படி அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள ஜாலியோ ஜிம்கானா என்கிற பாடலுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் பாடலின் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

அதில் பனி பரதேசத்தில் நடனம் இயக்குனர் நடனம் சொல்லிக்கொடுப்பது போல் அமைந்துள்ளது. அதில் நெல்சன் காமெடி நடிகர்களை நடனம் பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது. மேலும் காமெடி நடிகர்களை கலாய்க்கும் விதமாக தெறிக்க விடுவது போல் அமைந்துள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles