Monday, May 20, 2024
-- Advertisement--

கொரோனா காலத்தில் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்ட நெல்லை துணை ஆணையருக்கு பதக்கம்..!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக பரவி வந்த போது ஒரு சில மாவட்டங்களில் மட்டும் குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் உள்ள சட்ட ஒழுங்கு காவல் துறை ஆணையர் சரவணன் அவர்கள் எடுத்த அதிரடி நடவடிக்கையால் கொரோனா படிப்படியாக குறைந்து கட்டுக்குள் வந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றியும் சமூக வலைத்தளங்களில் கூறியுள்ளார். அது என்னவென்றால் மாஸ்க் அணிவது அவசியம், தனிமனித இடைவெளி கடைபிடிப்பது மற்றும் கூட்டம் கூடுவது தவிர்த்தல், இதுபோன்ற விழிப்புணர்வை நெல்லை சட்ட ஒழுங்கு காவல் துறை ஆணையர் சரவணன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுகளினால் மிகவும் வரவேற்பு கிடைத்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நாளை கொண்டாடவிருக்கும் சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 ஆம் தேதி அன்று காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் சிறப்புப் பதக்கம் வழங்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நெல்லை சட்டமன்ற ஒழுங்கு காவல் துணை ஆணையர் சரவணன் அவர்களுக்கு முதல்வர் பதக்கம் வழங்கப்பட உள்ளது.

இவர்களுடன் சேர்த்து சேலத்தை சேர்ந்த எஸ்பி தீபா கணிகர் மற்றும் மத்திய குற்றப்பிரிவு தலைமை காவலர் ஜெகன்நாத் ஆகியோருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles