தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா. நானும் ரவுடி தான் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அந்த படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கினார்.

நயன்தாரா ஏற்கனவே பல காதல் தோல்விகள் சந்தித்ததால் பல வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த நயன்தாரா தனது காதலருடன் திருமணம் செய்து கொள்ளாமலே பல வருடங்களாக வாழ்ந்து வந்தார்.
திருமண தோஷங்கள் நயன்தாராவின் ஜாதகத்தில் இருந்ததால் பல பரிகாரங்கள் செய்து கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடுகள் செய்த பின் தான் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

ஜூன் 9ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் சிறப்பாக நடந்து முடிந்தது நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம்.
நயன்தாராவின் திருமணத்திற்கு முக்கிய சினிமா பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். சில மாதங்களுக்கு முன்பு தேனிலவுக்காக தாய்லாந்து சென்றிருந்தனர் நயன்தாரா விக்கி. அங்கு உள்ள சொகுசு ஹோட்டலில் தங்கி இருந்தனர்.

அட்லீ இயக்கத்தில் ஹிந்தி படமான ஜவான் படத்தில் ஷாருகானுக்கு ஜோடியாக நடித்து கொண்டு இருக்கும் நயன்தாரா ஷூட்டிங் வேளைகளில் படுபிஸியாக இருந்தார்.

காத்து வாக்குல ரெண்டு காதல் வெற்றிக்கு பிறகு விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து இயக்கும் புதிய படத்தின் கதையை மெருகேற்றுவதில் கவனம் செலுத்தி வந்தார். chess olympiad நிகழ்ச்சியில் பிஸியாக இருந்த விக்கி. தனது காதல் கணவருடன் ஸ்பெயின் சென்று உள்ளார்.

அங்கு தனது கணவருடன் எடுத்த ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.




