Sunday, May 5, 2024
-- Advertisement--

கொழு கொழுன்னு இருந்த நயன்தாரா இப்படி ஆகிட்டாரே..!! இணையத்தில் பரவும் நயன்தாராவின் புகைப்படம்.

நயன்தாரா, நடிகைகள் ஓரிரு ஆண்டுகள் சினிமாவில் தாக்கு பிடிப்பதே சிரமமாக இருக்கும் இந்த நேரத்தில் 15 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஒரு அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார். தமிழ் சினிமா ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் முதலில் ஒரு மலையாள சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி னார்.

ஒரு சில நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார். அதன்பின் ஒரு சில மலையாளப் படங்களில் தலைகாட்டி வந்த நயன்தாராவை இயக்குனர் ஹரி ஐயா படத்தில் நடிக்க வைத்தார். முதன் முதலில் தமிழ் சினிமாவிற்கு சரத்குமார் அவர்களுக்கு ஜோடியாக ஐயா படத்தில் அறிமுகமானார் நயன்தாரா. ஐயா படத்தில் சற்று குண்டாக காணப்பட்ட நயன்தாரா அதன்பின் பல வருடங்கள் கழித்து கடினமான உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்.

சிம்புவுடன் காதல் மற்றும் பிரபுதேவாவுடன் காதல் என்று பல காதல்களை சந்தித்து தோல்வி பெற்றாலும் தான் செய்யும் தொழிலை சரியாக செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்த நயன்தாரா தன் வாழ்வில் பல தோல்விகளை சந்தித்து இன்று தமிழ்நாட்டில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

முன்பெல்லாம் நயன்தாரா தயாரிப்பாளரிடம் சான்ஸ் கேட்கும் காலம் போய் நயன்தாராவின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் தயாரிப்பாளர்கள் இன்றும் உள்ளனர். சமீபத்தில் ஐயா படத்தின் போது இருந்த நயன்தாராவின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்தப் புகைப்படங்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles