தமிழ் சினிமாவின் உச்ச நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. இவர் இந்த இடத்திற்கு முன்னேற பல தடைகளை இவர் தாண்டி வர வேண்டி இருந்தது. இவருக்கு பல முறை மனம் உடைந்து போகும் அளவிற்கு வாழ்க்கையில் பல ஏமாற்றங்களை சந்தித்துள்ளார்.
தற்போது மீண்டும் சில இடைவெளிக்கு பிறகு சினிமாவில் மார்க்கெட் குறையாமல் உச்சத்தில் இருப்பவர் இவர் தான். தற்போது ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தில் இவர் நடித்து வருகிறார். இதற்காக தன் சம்பளத்தை குறைத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.
ஊரடங்கு காரணமாக இவரை பற்றிய செய்திகள் எதுவும் வெளிவரவில்லை. இவர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர் தன் மாமியார் அதாவது விக்னேஷ் சிவனின் அம்மாவுடன் எடுத்த புகைப்படங்ள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.