Saturday, May 18, 2024
-- Advertisement--

அரசியல்வாதிகளை டார்கெட் செய்யும் நயன்தாரா..!!! முக்குத்தி அம்மனின் தரிசனம் இதோ.

நயன்தாரா ஒரு நடிகை நீண்ட காலமாக தனது பயணத்தை தொடர்கிறார் என்றால் பெரிய ஒரு ஆச்சரியமான விஷயம். அதுவும் தமிழ் சினிமாவில் கிட்டத்திட்ட 10 வருடங்களுக்கு மேல் தனது சினிமா பயணத்தில் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கும் நயன்தாரா தமிழக மக்களின் லேடி சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் நடித்த அறம் படம் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த நயன்தாரா தற்பொழுது ஆர்ஜே பாலாஜி உடன் இணைந்து மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நடித்துள்ளார். கையில் சூலம் தலையில் கிரீடம் அம்மன் வேடத்தில் நயன்தாராவின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆனது முதல் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இந்த படத்துக்கு நிலவி வந்தது.

ஆர்ஜே பாலாஜி LKG என்ற படத்தில் தமிழக அரசியலை பங்கமாக கலாய்த்தவர். நயன்தாரா ஆர் ஜே பாலாஜி இணையும் படம் எப்படி இருக்கும் என்று ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இன்று மூக்குத்தி அம்மன் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. வழக்கம்போல RJ பாலாஜி நடப்பு அரசியலை நயன்தாராவை வைத்து வச்சி செய்திருக்கிறார்.

மூக்குத்தி அம்மன் படத்தின் டிரைலர் ஆரம்பமே தமிழகத்தில் உள்ள ஒரு மூத்த கட்சியை கலாய்ப்பது போல இருந்தது அதனைத் தொடர்ந்து இறுதியில் ஆன்மிகத்தை வைத்து அரசியல் செய்யும் மற்றொரு கட்சியை தாக்கும் விதத்தில் இருந்தது. என்னதான் நயன்தாரா அம்மன் வேடத்தில் வந்தாலும் அம்மன் வேடத்தில் கனகச்சிதமாக இருக்கிறார் என்று சொல்ல முடியவில்லை.

எது எப்படியோ இந்த தீபாவளியில் அரசியலை ஆர் ஜே பாலாஜி வச்சி செய்யும் தீபாவளியாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளி அன்று ஹாட்ஸ்டார் இல் வெளியாக உள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles