நயன்தாரா தமிழ்நாட்டில் லேடி சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்படும் ஒரே நடிகை இவர்தான். இன்றும் நயன்தாரா விற்கான ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். ஐயா படத்தில் அறிமுகமான நயன்தாரா அதன்பின் தமிழில் தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார். தனது வாழ்வில் காதல் தோல்விகளை சந்தித்த நயன்தாரா. மனதளவில் பெரிய கஷ்டத்தை சந்தித்தார். முதலில் நடிகர் சிம்புவுடன் காதல், அதன்பின் நடிகர் பிரபுதேவா உடன் காதல் என்ற தொடர் காதல் தோல்விகளை சந்தித்த பலர் அவமானப்படுத்தினார்கள். ஆனால் அந்த அவமானங்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலையை மட்டும் சிறப்பாக செய்து வந்ததால் இன்றும் நம்பர் ஒன்னாக இருக்கிறார் நயன்தாரா .
நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவன் என்ற இயக்குனரை காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. விக்னேஷ் சிவன் நயன்தாராவை வைத்து நானும் ரவுடிதான் என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்தப் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நயன்தாராவை காதலிக்க தொடங்கினார். காதல் ஜோடிகளாக இருவரும் ஊர் சுற்றி வந்த நிலையில் விக்னேஷ் சிவன் நயன்தாராவை தனது வீட்டிற்கு அழைத்து சென்று தனது தாயாருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். நயன்தாரா தனது மாமியாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் என்று இணையத்தில் வைரலானது அந்த புகைப்படங்கள்.
இதையும் படிங்க : பிரபல நடிகை ரீமாசென்னின் கணவர் இவரா…!!! இணையத்தில் வைரல் ஆகும் திருமண புகைப்படங்கள்..
தற்போது செய்தி என்னவென்றால் நயன்தாராவின் மாமியார் அதாவது விக்னேஷ் சிவனின் தாயார் மீனாகுமாரி சென்னையிலுள்ள வடபழனியில் போலீசாக பணியாற்றி உள்ளார். விக்னேஷ் சிவனின் தந்தையும் ஒரு போலீஸ் அதிகாரி தான். ஆனால் தனது தந்தை இப்போது அவருடன் இல்லை என்பதால் தனது தாயை தந்தை ஸ்தானத்தில் பார்த்து வருகிறார் விக்னேஷ் சிவன்.