விக்னேஷ் சிவன் இவர் சிம்புவை வைத்து “போடா போடி” என்ற படத்தை இயக்கினார். அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பின் தனுஷின் “வேலை இல்லா பட்டதாரி” என்ற படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து நயன்தார- விஜய் சேதுபதி ஜோடியாக நடித்த “நானும் ரவுடி தான்” என்ற படத்தை இயக்கினார். அந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த பட பாடல்களும் மாபெரும் வெற்றியை பெற்றது . அந்த படத்தின் மூலம் நயன்தாராக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நட்பு ஏற்பட்டது நாளடைவில் அவர்களது நட்பு காதலாக மாறியது. சூர்யாவின் “தானா சேர்ந்த கூட்டம்” படத்தை இயக்கினார் அது சுமார் ரகமாக அமைந்தது.
நயன்தாராவும் காதலை ஏற்று கொண்ட பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் காதலர்களாக வெளிநாடுகள் சுற்றி வந்தார்கள். விக்னேஷ் சிவனும் நயன்தாராவை அவரது இல்லத்திற்கு அழைத்து சென்று தனது அம்மாவுடன் புகைப்படம் எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டார்.
நயன்தாராவிற்கு விக்னேஷுக்கும் திருமணம் ஏற்பாடு செய்து வருவதாக செய்திகள் வந்தது. திடீர் என்று நயன்தாராவும், விக்கியும் ஆன்மிகத்தில் இறங்கினார்கள். இருவரும் பயபக்தியோடு சாமி தரிசனம் செய்தார்கள். ஏதாவது பரிகாரமாக இருக்கும் திருமணத்திற்கு முன் கோவில்களுக்கு சென்று இருவரும் வழிபட்டு வருகிறார்கள் என்றாலும் கிசு கிசு வந்தது.
இதையும் படிங்க: நினைத்தேன் வந்தாய் அந்த பாடலில் நடித்தது ரம்பாவே இல்லை…!!! உண்மையை போட்டு உடைத்த இயக்குனர்.
இதற்கிடையில் விக்னேஷ் முதல் முதலாக இயக்கி நடித்த படம் “சிவி” என்ற பேய் படமாம். அந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் முதல் முதலில் நடித்தும் இருக்கிறார். சிவி படத்தை எடுக்கும் போது மிகவும் ஆர்வத்துடன் பிடித்து எடுத்துள்ளார் விக்னேஷ் சிவன். அவருக்கு பிடித்த பேய் “சிவி” தான். அந்த படத்தை பார்த்தால் பயம் இல்லாதவர்கள் கூட நடுங்கி பயப்படுவார்கள். அந்த அளவுக்கு அந்த படம் சீட்டின் நுனியில் உக்கார வைத்தது. ஆயிரம் பேய் படங்கள் வந்தாலும் “சிவி” வேற லெவல்.