Thursday, May 9, 2024
-- Advertisement--

ஸ்டார் ஹோட்டலில் மாமியார் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நயன்தாராவின் வருங்கால கணவர்..!!! புகைப்படங்கள் உள்ளே.

நயன்தாரா தமிழில் ஐயா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்து இன்றுவரை லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை தக்க வைத்து வரும் ஒரே நடிகை. இவருடைய வாழ்க்கையில் பல காதல்கள் தடுமாற்றங்கள் இருந்தாலும் இன்றுவரை சினிமாவில் தடுமாறாமல் ஒரே நிலையை தக்க வைத்து வருவது பெரிய விஷயம் தான்.

முதலில் நடிகர் சிம்புவை காதலித்து வந்தார். அதன்பின் ஏதோ கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்தார்கள். சில வருடங்களுக்குப் பிறகு பிரபல நடன இயக்குனர் பிரபுதேவாவை தீவிரமாக காதலித்து வந்தார். இதனால் பிரபுதேவா தனது மனைவியை விவாகரத்து செய்யும் அளவிற்கு விவகாரம் சென்றது. நயன்தாராவிற்கும் பிரபுதேவாவின் மனைவிக்கும் கடும் வாக்குவாதங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது.

நயன்தாரா கையில் பிரபு என்று பச்சை குத்திக் கொள்ளும் அளவிற்கு காதல் முற்றியது. ஆனால் கடைசியில் என்ன நினைத்தார்களோ என்னமோ பிரபுதேவாவும் நயன்தாராவும் பிரிந்தார்கள். மனம் நொந்து போன நயன்தாரா நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.அதன்பின் சில வருடங்களுக்குப் பிறகு நானும் ரவுடிதான் என்ற படத்தின் மூலமாக விக்னேஷ் சிவன் நயன்தாரா விற்கு அறிமுகமானார். இவர்கள் இருவருக்கும் இருந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது உடனே காதல் கல்யாணம் என்றால் ஒருவேளை செட் ஆகாமல் போகி விடுமோ என்று நினைத்தார்களோ என்னவோ பல வருடங்களாக இருவரும் காதலித்து மட்டும் வந்தனர்.

ஏதாவது பண்டிகை காலங்களில் விக்னேஷ் சிவன் நயன்தாராவை தனது வீட்டிற்கு அழைத்து சென்று தனது குடும்பத்துடன் கொண்டாடுவார். நயன்தாரா விக்னேஷ் சிவன் காதலுக்கு அவர்களது பெற்றோரும் கிரீன் சிக்னல் கொடுக்க எப்போது திருமணம் என்று ரசிகர்கள் ஒரு பக்கம் காத்திருக்க இவர்கள் அடிக்கடி வெளிநாடு செல்வது புகைப் படங்களை வெளியிடுவது என்று இருந்து வருகின்றனர்.

சமீபத்தில் விக்னேஷ் சிவனின் மாமியார் அதாவது நயன்தாரா அம்மாவின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி அதனை புகைப்படமாக வெளியிட்டு உள்ளார் நயன்தாராவின் வருங்கால கணவர். இதோ அந்த புகைப்படங்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles