Monday, May 6, 2024
-- Advertisement--

சொகுசு விமானத்தில் சொகுசாக வந்து இறங்கிய நயன்தாரா..!!! மாமியார் வீட்டுக்கு விசிட் அடிக்க இருக்கும் வருங்ககால கணவர் விக்கி..!!!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை. எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிக்கக்கூடிய நடிகைகளில் இவரும் ஒருவர்.

இவர் சந்தித்த காதல் தோல்விகளையும் நம்பிக்கை துரோகங்களையும் வேறு எந்த நடிகை சந்தித்திருந்தாலும் சினி உலகை விட்டு விலகி இருப்பார்கள் ஆனால் அதை எல்லாம் தாண்டி தான் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் சினிமாவில் தொடர்ந்து நடித்து தற்போது நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்.

இரண்டு காதல் தோல்விகளை சந்தித்து மனம் நொந்துபோன நயன்தாரா சில ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து வருகிறார். தனக்கு ஓய்வு நேரம் கிடைக்கும் போது இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா வெளிநாடுகளில் சுற்றி திரிவார்கள்.

அமெரிக்காவில் நயன்தாராவின் நெருங்கிய தோழிகள் ஒரு சிலர் உள்ளனர் அவர்களை சந்தித்து அவர்களுடன் நேரத்தை செலவிட்டு வருவார்களாம்.

நயன்தாராவிற்கு ஏதோ பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்று காதலன் விக்னேஷ் சிவன் வீட்டில் இருந்து கூற உடனே நயன்தாரா பல பிரபலமான ஸ்தலங்களுக்கு சென்று பூஜைகளில் கலந்து கொண்டார். அதுமட்டுமல்லாமல் அவர் மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் சரியான முறையில் விருதம் எடுத்து நடித்தாராம்.

சமீபத்தில் நயன்தாரா குஞ்சாக்கோ போபன் அவர்கள் நடித்து மலையாளத்தில் வெளிவந்த படம் நிழல் இந்தப் படம் ஒன்பதாம் தேதி ரிலீசாகி ஓரளவு வரவேற்பை பெற்று வருகிறது இந்நிலையில் நயன்தாராவும் அவரது வருங்கால கணவர் விக்னேஷ் சிவனும் சொகுசு விமானத்தில் கொச்சின் வந்து இறங்கிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.

ஓய்வு நேரத்தில் தனது மாமியார் வீட்டுக்கு சென்று அவர்களுடன் பொழுதைக் கழித்து வருவார்களாம் நயன் மற்றும் விக்கி. சில நாட்கள் ஓய்விற்குப் பிறகு மறுபடியும் நயன்தாரா அண்ணாத்த மற்றும் காத்துவாக்குல எந்த காதல் படத்தில் நடிப்பார் என்று செய்திகள் வெளிவந்துள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles