கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும் இந்நிலையில் மகாராஷ்டிராவில் கொத்துக்கொத்தாக மக்கள் பாதிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளனர். மக்களைப் பாதுகாப்பதற்காக தடுப்பூசியை விரைவில் கொண்டு வர வேண்டுமென்று தடுப்பு ஊசி விநியோகத்தை தொடங்கியது மத்திய அரசு.
தற்பொழுது கொரோனா பாதித்த நபர்களுக்கு தடுப்பு ஊசி போட்டு வருகிறது அரசு. இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் இன்று குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இன்று உருவாக்கப்பட்டன நாட்டு வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்த தலைசிறந்த மக்களின் வசிப்பிடமாக இரு மாநிலங்களும் விளங்குகின்றன. கொவிட்-19 நோய் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்த மாநிலங்கள் வெற்றியடைந்து இம்மாநில மக்கள் நல்ல உடல் ஆரோக்கியத்தை பெறட்டும் என்று வாழ்த்தியுள்ளார்.