Friday, May 17, 2024
-- Advertisement--

மோடி நிறைய பேய்களுக்கு உதவி செய்து உள்ளார்..!!! பிரச்சாரக்கூட்டத்தில் தமிழில் பேசி பீதியை கிளப்பிய நமிதா..!!!

தேர்தல் பிரச்சாரங்கள் முடிவிற்கு வர இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளதால் அந்தந்த கட்சி தலைவர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் மும்மரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை நமிதா பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று ராமேஸ்வரம் சென்ற நமிதா காலையில் அங்கு உள்ள கோவிலில் தியானம் செய்துவிட்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றார்.

ஏற்கனவே நமிதாவின் மச்சான்ஸ் தமிழ் பற்றி சொல்லவே தேவையில்லை தமிழ்நாட்டில் நிற்கும் ஒரு தமிழ் வேட்பாளரை ஆதரித்து பேசும்போது தமிழை பயமுறுத்தும் அளவிற்கு பேசி வருகிறார் நமிதா. நமிதா பேசும் தமிழை கேட்க நல்லவேளை தமிழ் புலவர்களும், தமிழ் எழுத்தாளர்களும் ஜாம்பவான்களும் தற்பொழுது இல்லை.

ஒவ்வொரு பிரச்சாரத்திலும் ஏதாவது பேசி விடுவார் என்று அவருக்கு புரியும்படி தங்கிலீஷில் எழுதிக் கொடுக்கின்றனர் பாஜகவினர் ஆனால் நமீதா மக்களைப் பார்த்த உற்சாகத்தில் எழுதிக் கொடுத்ததை விட எக்ஸ்ட்ரா பேசுகிறாராம்.

சமீபத்தில் சிவகங்கையில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் எச் ராஜாவை ஆதரித்து நடிகை நமீதா பிரச்சாரம் செய்திருக்கிறார் அப்பொழுது மக்களைப் பார்த்து தனது உரையை படிக்க தொடங்கிய நமீதா மோடி ஜி முத்ரா திட்டம் உங்களுக்காக கொண்டு வந்து மூலம் நிறைய பேய்களுக்கு உதவி செய்தார் என்று படித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து தாமரைக்கு ஓட்போட் அதனால மாசத்துக்கும் குடும்பத்துக்கும் தலைவிக்கு ஆயிரத்து 500 ரூபாய் கொடுக்க போறேன் அதுகூட இலவசமா வருஷத்துக்கு ஆறு கேஸ் சிலிண்டர் கொடுக்கப் போறேன் அதுகூட இலவசமா இடம் இல்லாதவர்களுக்கு இடம் கொடுத்து வீடு கட்டிக்கொடுக்கும் அதுவும் இலவசமா என்று கூறிய அவர் வாஷிங் மெஷின் கொடுக்கப் போகிறேன் அதுவும் இலவசமா என்றார். தனது உரையை முடிக்கும்போது தாமரை மலரும் தமிழ்நாடு வளரும் என்று சொல்லி முடித்தார்.

மோடி நிறைய பேய்களுக்கு உதவி செய்தார் என்று நமீதா பேசிய பேச்சு சிரிப்பலையை ஏற்படுத்தியது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles