Sunday, May 19, 2024
-- Advertisement--

விஜய்க்கு அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. என் தம்பி விஜய்க்கு துணை நிற்பேன் – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அடிக்கடி சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். இரண்டு நாட்களாக சமூக வலைத்தளத்திலும் சரி சமூக ஊடகங்களிலும் சரி விஜய்க்கு ஏன் ஒரு லட்சம் வரி கட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது தான் ஹாட் டாபிக்.

விஜய் தனக்கு பிடித்த ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ரக காரை 2012ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்திருக்கிறார். இறக்குமதி வரியை செலுத்திய விஜய் மாநில வரி செலுத்த மறுத்து விட்டார். மாநில வரி அதிகமாக இருப்பதால் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் அதனை விசாரித்த நீதிபதி வரி கட்டுங்கள் என்று சொல்லாமல் விஜய் பற்றி அடுக்கடுக்காக விமர்சித்திருந்தார்.

குறிப்பாக அதில் ஹீரோக்கள் நிஜ வாழ்விலும் ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும் ரீல் ஹீரோவாக இருக்கக்கூடாது வரிகளை சரியாக கட்ட வேண்டும். தனது படங்களில் கருத்துக்களைச் சொல்லும் விஜய் இப்படி செய்துள்ளார் என்றும் அதுமட்டுமல்லாமல் பணம் ஒன்றும் உங்களுக்கு வானத்திலிருந்து கொட்டவில்லை ஏழைகள் கொடுக்கும் பணம் தான் என்றும் விமர்சித்திருந்தார்.

வரி கட்டுங்கள் என்று சொல்லி இருக்கலாம் ஏன் விஜய்யை விமர்சிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பெரும் விவாதம் நடந்து வந்தது. ஒரு நாட்டின் குடிமகன் தனக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதனை நீதிமன்றத்தை நாடி தீர்த்துக்கொள்ள உரிமை உள்ளது அதைதான் விஜயும் செய்திருக்கிறார் ஏன் விஜய் மட்டும் டார்கெட் செய்து இப்படி விமர்சித்துளளனர் என்று பேசத் தொடங்கினார்கள்.

wesupportvijay என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்ய தொடங்கினார்கள் விஜய் ரசிகர்கள். அதனைத் தொடர்ந்து தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இந்த விஷயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அன்புத்தம்பி விஜய், அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது துணிந்து நில் இது அவதூறுதானே ஒழிய, குற்றம் இல்லை தொடர்ந்து செல் ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு என்று உன் படத்தில் வரும் பாடல் வரிகள் போல மிகுந்த உறுதியோடு முன்னேறி வா தம்பி என்று அன்புடன் கேட்டுக்கொண்டார் அத்துடன் மட்டுமல்லாமல் மறைமுக அழுத்தங்களில் இருந்து மீண்டுவர தம்பி விஜய்க்கு துணை நிற்பேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles