Monday, May 20, 2024
-- Advertisement--

இந்தியாவில் முதல் முறையாக 234 தொகுதியில் 50 % ஆண்கள் 50 % பெண்கள் வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்திய சீமான்..!!! இலவச கல்வி மற்றும் மருத்துவம் அதிரடியான திட்டங்கள் அறிவிப்பு.

தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் இந்நேரத்தில் அந்தந்த கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 234 தொகுதி வேட்பாளர்களை நேற்று சீமான் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார்.

அறிமுகப்படுத்தியவர் கூறியது வேட்பாளர் தேர்தலில் ஆண் பெண்ணுக்கு சம உரிமை அளிப்பது பிறவி கடமை. ஆணும் பெண்ணும் சமம் என்பதை எங்கள் கொள்கை, எங்கள் கொள்கையை ஏற்றுக் கொண்டதால்தான் 17 லட்சம் பேர் எங்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சியை தேர்தலில் வெற்றிபெற செய்தால் உலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு 5 ஆண்டுகளில் பல சாதனைகளை தமிழகத்தில் படைத்து காட்டுவோம்.

தரமான இலவசக் கல்வி மற்றும் மருத்துவம் அளிப்போம்.

வேளாண் பணிகள் அனைத்தும் அரசு பணிகளாக அறிவிக்கப்படும்.

60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் உயிரைக் கொடுத்தாவது விவசாயிகளை வாழ வைப்போம். அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை நோக்கி மாணவர்களை படையெடுக்க வைப்போம்.

டாஸ்மாக் கடைகளை மூடி மதுவை ஒழிப்போம். டாஸ்மாக்கிற்கு பதிலாக மக்களுக்கு மூலிகைச்சாறு கொடுப்போம் என்று கூறிய அவர் எம்எல்ஏ, எம்பி , அமைச்சர் ,முதல்வர், அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் என அனைவரின் குழந்தைகளும் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்பதை முன் நிறுத்துவோம்.

அதுபோல அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் தான் மருத்துவம் பார்க்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்படும்.

தமிழ் வழியில் படித்தால்தான் வேலை என்று நிலை நிச்சயம் கொண்டு வரப்படும் என்று சீமான் கூறியுள்ளார்.

இந்த வாக்குறுதிகளை தொடர்ந்து 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை சீமான் வாசித்தார் அதில் சரிக்கு சமமாக ஆண் பெண்ணை வேட்பாளராக நிறுத்தி உள்ளார். ஒரு கட்சி ஆண் வேட்பாளர்களுக்கு சரிசமாக பெண் வேட்பாளரை தேர்தலில் நிறுத்துவது இந்தியாவில் இதுவே முதல் முறை.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles