Saturday, December 10, 2022
-- Advertisement--

மீனாவின் கணவர் மரணத்தில் மர்மம் உள்ளது பயில்வான் ரெங்கநாதன் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு…!!! கோபத்தில் ரசிகர்கள்.

பிரபல நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக இருந்ததிலிருந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். சினிமாவில் அறிமுகமான மீனா சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுடன் அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

அதன்பின் பல வருடங்கள் கழித்து ரஜினிக்கு ஜோடியாக வீரா, முத்து போன்ற படங்களில் நடித்திருந்தார். சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனாவின் கால்ஷீட்டுக்காக காத்துக்கிடந்த தயாரிப்பாளர்கள் ஒரு நேரத்தில் பலர் இருந்தார்கள். அந்த அளவிற்கு தமிழில் பெரிய முக்கியமான கதாநாயகியாக பெயர் பெற்றவர் இவருடைய கணவர் இரண்டு நாட்களுக்கு முன்பு அதாவது ஜூன் 28ம் தேதி நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினையால் உயிரிழந்தார்.

மீனாவின் கணவர் வித்யாசாகர் நன்றாகதான் இருந்ததாகவும் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனை கடந்த மூன்று மாதங்களாக தான் அவருக்கு பெரிதாக இருந்து வந்ததாகவும் செய்திகள் வந்துள்ளது. அது மட்டும் அல்ல நுரையீரல் மாற்று சிகிச்சை செய்ய ரெடி ஆக இருந்ததாகவும் இருந்ததாம்.

மூன்று மாதகாலமாக மீனா தனது கணவரை மிக அக்கறையோடு பார்த்துக் கொண்டதாகவும் கூறுகிறார்கள். அதே போல தனது மகள் நைனிகாவிற்கு தனது தந்தையின் உடல்நிலை பற்றி கூறவில்லையாம் . இறந்த தனது தந்தையின் உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் மீனாவின் மகள் நைனிகா அதன்பின் அவரை சமாதானப்படுத்தினார்களாம் உடனிருந்தவர்கள். அது போன்று தனது கணவருக்கு செய்ய வேண்டிய அனைத்து மரியாதை மற்றும் சாஸ்திரங்களை தானே முன்வந்து செய்தாராம் மீனா. தனது கணவரின் அஸ்தியை இடுகாட்டில் அரை மணி நேரம் காத்திருந்து வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தாராம்.

இதுபோன்ற செய்திகள் வந்து கொண்டே இருக்கையில் வழக்கம்போல பயில்வான் ரங்கநாதன் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் மீனா கணவர் இறப்பில் சந்தேகம் உள்ளது. பெங்களூரில் புறா அதிகம் வளர்த்ததால் புறாவின் எச்சத்தினால் மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்பது உண்மை இல்லை. புறா ஒரு மனிதனுக்கு அந்த அளவு கெடுதலும் கிடையாது.மருத்துவமனை அறிக்கை எதனால் வெளியிடவில்லை இதெல்லாம் மர்மமாக உள்ளது என்று கூறிய அவர் மீனா அவர்கள் தமிழில் கொடி கட்டி பறந்த நடிகை அவரை முதலில் பெண் கேட்டு வீட்டுக்கு சென்ற அவர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவர்கள் தான் ஆனால் மீனாவின் தாயார் சரத்குமாரிடம் மழுப்பி அனுப்பிவிட்டார் என்று கூறியதுடன் மீனா சாப்ட்வேர் என்ஜினீயரான வித்யாசாகர் என்பவரை பெற்றோர்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டார் முதலில் வித்யாசாகரை திருமணம் செய்ய மீனா மறுத்தாராம் பெற்றோர்கள் எடுத்துக் கூறியதால் திருமணம் செய்து கொண்டார் என்று கூறி உள்ளார் பயில்வான் ரெங்கநாதன். .

தொடந்து பேசிய அவர் “பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்த வித்யாசாகர் நல்ல வசதி. மீனாவையும் திருமணத்திற்குப் பிறகு நடிக்க வேண்டாம் நம்மிடம் போதுமானது உள்ளது என்று கூறியிருக்கிறார் ஆனால் மீனா தனது மகள் நைனிகாவை விஜயின் தெறி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததும் நடிக்க வைத்தார் விஜய் படத்தில் நைனிகா நடிப்பதை மீனாவின் கணவர் கணவருக்கு விருப்பமில்லை. இருந்தும் மீனா தனது மகளை நடிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில் விஜயின் படத்தில் நடிக்க வைத்தார்.

அங்கிருந்துதான் அவர்களுக்கு பிரச்சினை ஆரம்பித்தது அதன்பின் மீனாவும் தொடர்ந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்து விட்டார் நல்ல வசதி இருந்தும் மீனா ஏன் மீண்டும் நடிக்க வந்தார் என்பது தெரியவில்லை என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தார்.

அத்துடன் மீனா நல்ல நடிகை எந்த ஒரு கிசுகிசுவிலும் அவருடைய பெயர் அடிபடாது என்று பயில்வான் ரெங்கநாதன் வீடியோவில் பேசி உள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மீனாவின் கணவர் இறந்து ஒரு நாள்தான் ஆகியுள்ளது அதற்குள் அவர்களுடைய குடும்ப விஷயத்தை வெளியில் தெரியாமல் பேசுவது சரியா.கணவரை இழந்து வாடும் மீனா பற்றி தேவையற்ற விஷயங்களை பேசாதீங்க என்று பயில்வான் ரெங்கநாதனிடம் கோபத்துடன் கேட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,613FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles