Saturday, May 11, 2024
-- Advertisement--

விஜயின் அடுத்த படத்தை விட்டு விலகினரா முருகதாஸ்…!!! என்ன நடந்தது?

தளபதி விஜய் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இவருக்கு உள்ள ரசிகர் பலம் அனைவரும் அறிந்த ஒன்றே. இன்று ரஜினிக்கு நிகராக பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை செய்வது விஜய்யால் மட்டுமே சாத்தியம். விஜய்யின் ஐம்பதாவது திரைப்படம் சுறா வெளியான பிறகு விஜய் சினிமாவில் நடிக்கவே தேவையில்லை என்றெல்லாம் விமர்சனம் வந்தது ஆனால் தனது 51வது திரைப்படத்திலிருந்து ஆரம்பித்தது விஜயின் ஆட்டம்.

விஜய் படங்கள் என்றால் கமர்சியல் மட்டுமே இருக்கும் ஆனால் கதை இருக்காது என்ற கருத்து மாறி விஜய் படங்கள் கமர்சியல் படமாக இருந்தாலும் அதில் ஒரு நல்ல கருத்து இருக்கும் என்ற என்னத்தை மாற்றி பேச வைத்தார் விஜய். ஒரு சில ரஜினி படங்களின் சாதனையை விஜய் படங்கள் அசால்டாக முறியடித்தது என்பதுதான் உண்மை. தற்பொழுது விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று பிடிவாதத்தில் இருக்கிறது விஜய் தரப்பு. விரைவில் திரையரங்குகள் திறந்தவுடன் மாஸ்டர் படம் வெளியீடு பற்றி அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தரப்பு கூறுகிறது.

விஜய்யின் மாஸ்டர் வெளியாக இருக்கும் இந்த நேரத்தில் விஜய்யின் அடுத்த படத்தை பற்றிய செய்திகள் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. விஜய்யின் மூன்று மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் இணைகிறார் விஜய் என்று செய்திகள் வந்தது. முருகதாஸ் அவர்களும் ஒரு நேரலையில் விஜயை வைத்து படம் இயக்க போறீங்களா என்று கேட்டதற்கு ஆம் அதனை அந்த தயாரிப்பு நிறுவனமே வெளியிடுவதுதான் முறை என்று கூறியிருந்தார்.

தளபதி 65 முருகதாஸ் இயக்கத்தில் புது கதைக்களத்தில் உருவாக உள்ளது என்று ரசிகர்களும் சந்தோஷம் அடைந்தனர். விஜய்யிடம் முருகதாஸ் முதல் பாதி கதையை சொல்லியிருக்கிறார் கதையை கேட்ட விஜய் நன்றாக இருக்கிறது இரண்டாம் பாதியை கூறுங்கள் என்று கேட்டிருக்கிறார். முதல்பாதி போல இருக்கும் என்று நினைத்த விஜய்க்கு சற்று ஏமாற்றமாக இருந்ததாக தகவல்கள் வெளிவந்தது.

முதல் பாதியை போன்று இரண்டாம் பாதியில் சுவாரசியமான திரைக்கதை இல்லை என்பதால் விஜய் நிறைய மாற்றங்கள் கூறியதாகவும் ஏ ஆர் முருகதாஸ் மாற்றத்தை மாற்றி விஜயிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது. தற்பொழுது ஏ.ஆர். முருகதாஸ் விஜய் படத்தை விட்டு விலகுவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. காரணம் சன் பிக்சர்ஸ் முருகதாஸ் கேட்ட தொகையை சம்பளமாக கொடுக்கவில்லை என்று ஒரு பக்கம் கூறுகிறார்கள். ஒரு சிலர் சன் பிக்சர்ஸ் முருகதாஸ் பேச்சுவார்த்தையில் அதிருப்தி என்று கூறி வருகிறார்கள்.

முருகதாஸ் விஜயிடம் சொல்லிய கதை தமிழ்நாட்டில் நடக்கும் நடப்பு அரசியலை பற்றிய கதையாம். அதே கதையை தயாரிப்பு நிறுவனம் சன் பிச்சர்சிடம் சொல்லுங்கள் என்றாராம் விஜய். கதை கேட்ட சன் பிச்சர்ஸ் நிறைய மாற்றங்களை சொன்னதாகவும் அதற்கு முருகதாஸ் கதையை மற்ற ஒப்புக்கொள்ளாததாலும் முருகதாஸ் உடன் பணிபுரியாமல் விலகியதாம் தயாரிப்பு நிறுவனம். நடந்ததை விஜயிடம் சொல்லிவிட்டு முருகதாஸ் ஒதுங்கி விட்டாராம்.

முருகதாஸ் விஜய் படத்தை விட்டு வெளியேறிவிட்டார் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போகும் இயக்குனர் முருகதாஸ் இல்லை என்று உறுதியாக கூறியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles