Wednesday, May 8, 2024
-- Advertisement--

பிக்பாஸ் சீசன் 3 பிரபலம் முகேன் ராவ் முதல் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!!! வேஷ்டி சட்டையில் கலக்கும் முகேன்…!!!

முகேன் ராவ் மலேசியாவை சேர்ந்த இவர் விஜய் டிவியில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். முகேன் உடன் சாண்டி, லாஸ்லியா, தர்சன், கவின், சேரன் ரேஷ்மா போன்றவர்கள் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டனர்.

பிக்பாஸ் சீசன் 3-ல் பிரபலமானவர்கள் முகேன், லாஸ்லியா, தர்ஷன், கவின் தான். முகேஷ் சிறப்பாக டாஸ்கை செய்வது மட்டும் அல்லாமல் தானே எழுதி சில பாடல்களை பாடி வந்தார் முகேன் அதில் நீதான் நீதான் நீதான்டி எனக்குள்ள என்ற பாடல் பெரிய பிரபலம் அடைந்தது. பிக்பாஸ் சீசன் 3ல் வின்னர் அறிவிக்கப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் மலேசியாவில் முகேனுக்கு அமோக வரவேற்பு கொடுத்தனர். பிக்பாஸ் கொடுத்த பிரபலத்தால் அவருக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் வந்தது. கதைகளை கேட்டு தேர்ந்தெடுத்து நடிக்க ஒப்புக் கொள்ளும் முகேன் தற்பொழுது ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார் அந்த படத்தை ஸ்கை மேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது இந்த படத்திற்கு பெயர் வேலன் என்று வைத்திருக்கிறார்கள். முகேன் உடன் ஜோடியாக கென்னடி கிளப் என்ற படத்தில் நடித்திருந்தார் மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் சூரியும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முகேன் முதல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பிரபல நடிகர் மம்முட்டி அவர்களின் மகன் நடிகர் துல்கர் சல்மான் அவர்களால் வெளியிடப்பட்டது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles