தன் மகள் தப்பு செய்தாலும் செய்தது தன் மகள் என்று அதை தட்டி கேக்காமல் இருக்கும் தாய்மார்களுக்கு மத்தியில் தன் மகள்கள் செய்த தவறுக்கு கொடூரமான தண்டனையை நிறைவேற்றிய தாய் நம் தமிழ் நாட்டில் உள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள சமுத்திரம் காந்திநகரை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி சாந்தமீனா. இவர்களுக்கு லோகநாதன் (15 ), கோகிலா (13 ), லலிதா (11 ) என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
தனது கணவர் மற்றும் அவரது சகோதரர்கள் ஆகியோரோடு கூட்டு குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை சாந்தமீனா வேலைக்கு சென்று வீட்டிற்கு வரும் போது இரு மகள்களும் மயக்கமான நிலையில் இருந்துள்ளனர்.
இதனை அறிந்து உறவினர்கள் உடனே மணப்பாறை அரசு மருத்துமனையில் சேர்த்துள்ளனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துமனையில் தீவிர சிகிச்சையில் சேர்க்க பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பலனளிக்காமல் இருவரும் உயிர் இழந்தனர்.
இதன் பிறகு திருச்சி காவல் நிலையத்தில் சரணடைந்த தயார் சாந்தமீனா, என் மகள்கள் இருவரும் கூட்டு குடும்பமாக வெல்லும் எங்கள் குடும்பத்தில் உள்ள என் கணவரின் சகோதரர்கள் பணத்தை திருடி விட்டனர்.
இது வெளியே தெரிந்தால் குடும்ப கெளரவம் போய் விடும் என்று எண்ணி நான் தான் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்தேன் என தெரிவித்தார். இதனை அடுத்து சாந்தமீனா மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர்.