தளபதி விஜயின் லியோ திரைப்படத்தை ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களே எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர். லோகேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள லியோ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்து உள்ளது.
லியோ படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளதால் அக்டோபர் 19 தேதி சிறப்பு கட்சிகளுக்கு தமிழக அரசிடம் அனுமதி கேட்டு உள்ளார்கள் படக்குழுவினர். விஜய் படங்களுக்கு பெரிய ப்ரோமோஷன் ஆடியோ லான்ச் அந்த விழாவை ரசிகர்கள் நலன் கருதி படக்குழுவினரே ரத்து செய்தார்கள்.
இந்நிலையில் லியோ திரைப்படம் அதிகாலை காட்சிகள் அனுமதி கிடைக்குமா என்று ரசிகர்கள் போல படக்குழுவினர் காத்துக்கிடக்க தற்பொழுது கிடைத்து உள்ள தகவலின் படி கிட்ட திட்ட 1000 திரை அரங்குகளில் லியோ திரைப்படம் அக்டோபர் 18 தேதி மாலை மற்றும் இரவே ஸ்பெஷல் PREMIRE SHOW ஆக வெளியாகும் என்ற அறிவிப்பு வந்து உள்ளது.
அதிகாலை காட்சிகள் அனுமதி இதுவரை கிடைக்காத நிலையில் அக்டோபர் 18 ஒரு நாள் முன்பே திரைப்படத்தின் PREMIRE ஷோ வெளியிடலாம் என்று தகவல் வந்து உள்ளது. இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்து உள்ளது.