Monday, May 20, 2024
-- Advertisement--

வலிமை படம் குறித்து கடைசி நேரத்தில் வெளிவந்த அறிவிப்பு..!!! சோகத்தில் அஜித் ரசிகர்கள்.

வலிமை அஜித்தின் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரையரங்கிற்கு வர இருந்த திரைப்படம். ஆரம்பத்தில் இருந்து வலிமை படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்தது காரணம் அஜித் மற்றும் வினோத் இணையும் படம் என்பதால் கண்டிப்பாக அனைத்து தரப்பினரையும் கவரும் என்ற பெரிய நம்பிக்கையில் ரசிகர்கள் இருந்தார்கள். ரசிகர்கள் எதிர்பார்த்த படி வலிமை படத்தின் டிரைலர் அனைவரையும் கவர்ந்தது குறிப்பாக ஹ வினோத் சுவாரசியமான புதிதான கதையை கையாண்டிருக்கிறார் என்பது ட்ரைலரில் தெரிந்தது.

பொங்கல் நேரத்தில் படத்தை வெளியிட்டால் தொடர்ந்து நான்கு நாட்கள் நன்றாக கலெக்ஷன் எடுத்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த படக்குழுவினர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள். இந்தியா முழுவதும் பல இடங்களில் ஊரடங்கு கடைப்பிடிக்க உள்ள நிலையில் நேற்று தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்து இருந்தது.

அதில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு மட்டுமே தியேட்டரில் திரைப்படம் காண அனுமதி என்று திட்டவட்டமாக கூறி இருந்தார்கள் ஏற்கனவே அதிக பட்ஜெட் போட்டு எடுத்த படமான RRR இந்த காரணத்தால் தான் தள்ளி வைத்தார்கள். வலிமையையும் தள்ளி போகும் என்று சிலர் கூறிவந்தனர் ஆனால் பலர் இல்லை கண்டிப்பாக அஜித் திரைப்படம் பொங்கல் விருந்தாக வரும் என்று பல தியேட்டர் உரிமையாளர்களே நம்பிக்கையுடன் பதிவு செய்து வந்தனர்.

நேற்றுவரை வலிமை 13ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது என்று போஸ்டர் அடித்து உள்ளார்கள் ஆனால் இன்று என்ன நடந்தது திடீரென்று வலிமை படக்குழுவினர் இருந்து வந்த அறிவிப்பு ரசிகர்களை பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியது வலிமை திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என்று அறிவித்ததோடு நாங்களும் மிகவும் கஷ்டப்பட்டு வலிமை படத்தை எடுத்து அதனை ரசிகர்கள் முன்னிலையில் திரையரங்கில் வெளியிட இருந்தோம் ஆனால் தொற்று பரவி வருவதாலும்,

விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் காரணமாக வலிமை படத்தை தற்போது ரிலீஸ் செய்வது தள்ளிவைக்கப்பட்டுள்ளது தடுப்பூசிகள் போட்டுக் கொண்டு முக கவசம் அணிந்து கொண்டு பத்திரமாக இருங்கள் விரைவில் தியேட்டரில் பார்ப்போம் என்று அறிவித்துள்ளார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles