Tuesday, May 21, 2024
-- Advertisement--

22 கிலோ எடையை குறைத்த பிரபல நடிகர் மோகன்லாலின் அன்பு மகள். எடையை குறைக்க என்ன செய்துள்ளார் தெரியுமா..!!!

மோகன்லால் மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் இவருக்கும் மம்முட்டி அவர்களுக்கும் இருக்கும் மார்க்கெட் வேறு எந்த ஒரு நடிகருக்கும் இன்றுவரை இல்லை. மம்முட்டி மற்றும் மோகன்லால் படத்தை குடும்பத்துடன் கேரள மக்கள் தவறாமல் பார்த்து ரசித்து வருவார்கள்.

மோகன்லால் அவரது மனைவியுடன்

மோகன்லால் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் தமிழ் படங்களில் நடிப்பதில் ஆர்வம் அதிகம் காட்டி வருகிறார். மோகன்லாலின் மகன் பிரணவ் தந்தையை போல சினிமாவில் களம் இறங்காமல் டைரக்டர் ஆக வேண்டுமென்ற ஆசையில் ஜீத்து ஜோசப் என்ற இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார் ஆனால் காலத்தின் கட்டளை பிரணவ் நடிகர் ஆனார்.

மோகன்லால் அவரது குடுமபத்தினர்

மோகன்லாலும் அவரது மகன் பிரணவ்வும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க பல பயிற்சிகளை செய்து இணையத்தில் புகைப் படங்களை வெளியிடுவார்கள். மோகன்லாலின் அன்பு மகள் விஸ்மாயா தனது தந்தையுடன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார்.

விஸ்மாயாவின் உடல் எடை அதிகமாக கூடிக் கொண்டே போக தாய்லாந்து நாட்டிற்கு சென்று ஒரு தீவில் உடல் எடையை குறைக்கும் பயிற்சி எடுத்துள்ளார். பிட்கோ என்ற உடற் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து உடலைக் குறைப்பதற்காக பயிற்சி எடுத்து உணவு முறை மூலமாக 22 கிலோ குறைத்துள்ளார் மோகன்லாலின் மகள் விஸ்மாயா.

தாய்லாந்துக்கு செல்லும் முன் அவரது புகைப்படத்தையும் தற்பொழுது உள்ள அவரது தோற்றத்தையும் புகைப்படமாக வெளியிட்டு உள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles