Monday, May 20, 2024
-- Advertisement--

ஒரே ஒரு பேஸ்புக் பதிவு…! ஒட்டுமொத்தமாக சூறையாடப்பட்ட எம்எல்ஏ வீடு மற்றும் காவல் நிலையம்..! 3 பேர் பலி..! அப்படி என்னதான் நடந்தது…

பெங்களூரில் ஒரு பேஸ்புக் போஸ்ட் காரணமாக இரண்டு பகுதிகளில் பெரிய கலவரம் ஏற்பட்டது. பெங்களூரில் உள்ள புலிகேசி நகர் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தி வீடு சூறையாடப்பட்டது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு புலிகேசி நகரை சேர்ந்தவர் காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாசமூர்த்தி இவரின் வீடு பெங்களூரில் இருக்கும் காவல் நிலையம் அருகே பைசந்த்ர என்ற பகுதியில் இருக்கிறது. இவர் வீடு மீது தான் நேற்று இரவு கடுமையாக தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறைக்கு முக்கிய காரணமே எம்எல்ஏ சீனிவாசமூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர் செய்த பேஸ்புக் போஸ்ட் தான்.

இஸ்லாம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் நவீன் பேஸ்புக்கில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நவீன் செய்த பேஸ்புக் போஸ்ட் பற்றி முதலில் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் டிஜே ஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பின் போலீஸ் அந்த புகாரை எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்ய முடியாது, நீங்கள் இதை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என்றும் அவர்களிடம் கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த மக்கள் அந்த போலீஸ் நிலையத்தை சூறையாடினர். போலீஸ் நிலையத்தில் உள்ள பைக்குகள் மீது தீ வைத்துள்ளனர். ஆயிரம் பேர் போலீஸ் நிலையம் வெளியே கூடியதாக கூறப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க இன்னொரு பக்கம் எம்எல்ஏ சீனிவாசமூர்த்தியின் வீடு மீது பல்வேறு கடுமையாகத் தாக்குதல் நடத்தி உள்ளனர். சீனிவாசன் வீடு முன் கூடிய வன்முறையாளர்கள் அவரின் வீட்டின் மீது கல் வீசித் தாக்கினர். முதலில் கலவரத்தை தடுக்க வன்முறையாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். கலைக்க முயன்றபோதும் ஆனால் வன்முறையாளர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles