Wednesday, May 8, 2024
-- Advertisement--

ரகுமானிடம் போகாதீர்கள் என்று இயக்குனர்களை தடுத்த குள்ளநரி கூட்டம்..!!! யார் அது ரகுமான் ஓபன் டாக்.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் 1992ல் அரவிந்த்சாமி மதுபாலா நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா படத்திற்கு தான் முதல்முதலில் இசை அமைத்தார். இந்தப் படத்தில் ஆரம்பித்த இவரது இசைப்பயணம் இன்றுவரை தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

இவரைப் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு ரகுமானின் வளர்ச்சி ஆஸ்கர் வரை சென்றது. ஆஸ்கர் விருதை பெற்ற ஒரு தமிழ் இசையமைப்பாளர் என்ற பெருமையை அவருக்கு அள்ளித் தந்தாலும் அவருடைய மனதில் நீண்ட நாட்களாக இருந்த வருத்தம் ஒன்றை இன்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

ரகுமான் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் ஆங்கில படங்கள் மற்றும் ஹிந்தி படங்களுக்கு இசையமைத்து வந்தார் ஆஸ்கர் விருதிற்கு பிறகு இவருக்கு ஹிந்தி பட வாய்ப்புகள் குறைவாகவே காணப்பட்டது. அதனை வானொலி நிகழ்ச்சி ஒன்றில் எனக்கு ஹிந்தியில் அதிகப் படங்கள் வந்தது ஆனால் அதனை தடுப்பதற்கு என்றே ஒரு கூட்டம் செயல்பட்டது அதனால் அந்த படங்களை என்னால் செய்ய முடியவில்லை.

அதுமட்டுமல்லாமல் சுஷாந்த் சிங் நடிப்பில் வெளியாகியுள்ள “dil bechara ” படத்தின் இயக்குனர் தன்னை சந்தித்து உரையாடியபோது பலர் ரகுமானிடம் செல்ல வேண்டாம் என்று கூறியதாகவும், ஒரு சிலர் அவரைத் தடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இசைப்புயல் ஹிந்தியில் இசை அமைப்பதை விட தமிழில் இசை அமைத்தால் அந்த இசையின் ஓசையே அரங்கம் அதிர செய்யும் என்பதே மக்கள் கருத்து.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles