Thursday, May 2, 2024
-- Advertisement--

கொரோனா பணியில் அமைச்சர் மகள்.!!! மகனை கூட தூக்கி கொஞ்ச முடியாத நிலை…!!! நெகிழ்ச்சி சம்பவம்.

நாடெங்கும் கொரோனாவிலிருந்து தங்களைப் பாதுகாக்க மக்கள் ஒருபக்கம் பாடுபட்டாலும். மக்களைப் பாதுகாக்க மருத்துவர்கள்,செவிலியர்கள் மற்றும் காவல்துறையினர் இந்த ஆறு மாதங்களாக மாபெரும் பாடுபட்டு வருகிறார்கள். கொரோனா என்ற வைரஸ் எப்போது ஆரம்பித்ததோ அன்றிலிருந்து இன்றுவரை அவர்கள் குடும்பத்தை கூட சரியாக கவனிக்க முடியாமல் கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக பாடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் கர்நாடகாவின் பள்ளிக கல்வித்துறை அமைச்சரான சுரேஷ்குமார் அவர்களின் மகள் திஷா மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். அதனால் அவரது குழந்தையை தனது தந்தை மற்றும் தாயிடம் பாதுகாப்பில் ஒப்படைத்துவிட்டு திஷா மருத்துவமனைக்கு செல்வார். மூன்று நாட்கள் தொடர் பணியினால் தனது மகனை பார்க்க முடியாமல் திஷா பணியாற்றி வந்தார்.

தன் மகனைப் பார்க்க ஆசைப்பட்டு தனது தந்தையின் வீட்டுக்கு சென்று தூரத்தில் நின்றபடி தனது மகனைப் பார்த்துள்ளார் திஷா. மூன்று நாட்களுக்கு பிறகு தனது தாயை பார்த்ததும் அவரிடம் செல்ல வேண்டும் என்று அழுது உள்ளான் அவரது மகன் விக்ராந்த். இருந்தும் திஷாவின் அம்மா அவனை விடவில்லை இந்த பாசப் போராட்டம் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது. 

இன்றும் மருத்துவர்கள் நமக்காக உழைத்தது கொண்டு தான் இருக்கிறார்கள். பல தியாகங்களை செய்து கொண்டு நம்மை காத்துவருகின்ற இவரை போன்ற ஒவ்வொரு மருத்துவருக்கும் நன்றியை தெரிவிப்போம்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles