ஐந்தறிவுள்ள விலங்குகளை பாதுகாப்பது மனிதனின் கடமை என்று ஒருபுறம் இருப்பினும், அதனை வேட்டையாடுவது அதனை துன்புறுத்துவது அதனை கொன்று சமைப்பது என்று மறு கூட்டமும் சுற்றிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் உணவிற்காக விலங்குகளை வேட்டையாடுவது ஒருபுறமிருக்க, தற்பொழுது ரோமத்திற்காக லட்சக் கணக்கான உயிரினங்கள் அழிந்து உள்ளன.
மேற்கத்திய நாடான ஸ்பெயினில் உள்ள ஆராகான் என்ற பகுதியில் அமைந்திருக்கும் ஒரு பிரசத்தி பெற்ற பண்ணையில் அங்கு வளர்க்கப்பட்டு வந்த சுமார் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மிண்க் விலங்குகள் அழிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
உலகில் உள்ள விலங்கு வகைகளில் மின்க் விலங்குகளின் ரோமங்கள் வைத்து செய்யப்படும் பொருட்களை சந்தையில் அதிக விலைக்கு விற்கப் படுகின்றது. இந்த நிலையில் உலக அளவில் ஏழாவது மின்க் உற்பத்தியில் பங்கு வகிக்கும் ஸ்பெயின் நாட்டில் வைரஸ் தாக்குதல் எதிரொலியாக அங்கு உள்ள பண்ணைகளில் ஒரு லட்சம் மின்க் விலங்குகள் கொல்லப்பட்டுள்ளது. இந்த செய்தி மிகவும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.