தீர்க்கமான சிந்தனை, சிறப்பான அறிவாற்றல் மற்றும் நினைவாற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5, 11-ல் சஞ்சரித்த ராகு கேது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் 30-10-2023 முதல் 18-5-2025 வரை (வாக்கியப்படி 8-10-2023 முதல் 26-4-2025 வரை) கேதுபகவான் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டிலும், ராகுபகவான் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய உள்ள இக்காலத்தில் ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கும் கிரகமான சனி பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் சகல சௌபாக்கியங்களையும் நீங்கள் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அனைத்து விஷயத்திலும் உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கூடுதல் வேலைப்பளு காரணமாக தேவையில்லாத அலைச்சல் அதன் காரணமாக உடல் அசதி ஏற்படலாம்.
வெளியூர் தொடர்புகள் மூலமாக பொருளாதார அணுகூலங்களும் எதிர்பாராத மகிழ்ச்சியான செய்திகளும் கிடைக்கும். உற்றார்- உறவினர்களை சற்று அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது. உங்களின் பொருளாதாரநிலை சிறப் பாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக்கொள்வது நல்லது. வீடுகளை பழுது பார்ப்பதற்காக சுபச்செலவுகள் செய்ய வேண்டி இருக்கும்.
ஒரு சிலர் பழைய வண்டியை விற்றுவிட்டு புதிதாக வாகனங்கள் வாங்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய செய்திகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் அனைத்துவிதமான நெருக்கடியும் சமாளித்து அடையவேண்டிய லாபத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு.
சர்ப்ப கிரகமான ராகு 10-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். அரசுவழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் முக்கிய பொறுப்புகள் உங்களைத் தேடிவரும். சக ஊழியர்கள் செய்யவேண்டிய வேலையை நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை நீங்கள் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலை நிமித்தமாக வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு ஏற்படும். பொன்னவன் என போற்றப்படக்கூடிய குரு உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான ஈ-ஆம் வீட்டில் வரும் 1-5-2024 முடிய சஞ்சாரம் செய்ய இருப்பது ஒரு மிகச்சிறப் பான அமைப்பாகும். இதன் காரணமாக எதிர்பாராத அனுகூலங்களை பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்தவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று கிடைக்கும். பூர்வீகச் சொத்துவகையில் அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை ஈட்டமுடியும். ஆன்மிக தெய்வீக காரியங்களுக்காக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. பெண்கள் வழியில் அனுகூலமான பலன்களை அடையமுடியும். உங்கள் ராசிக்கு 11-ல் சஞ்சரிக்ககூடிய குரு வரும் 1-5-2024 முதல் விரைய ஸ்தானமான 12-ல் சஞ்சாரம் செய்ய இருப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்றாலும் சனி 9-ல் இருப்பதால் எதையும் சமாளித்து அடைய வேண்டிய பொருளாதார அனுகூலங்களை அடைவீர்கள். உற்றார்- உறவினர்களுடைய ஆதரவு சிறப்பாக இருப்பதால் எந்தவித பிரச்சினையையும் சமாளிக்கக்கூடிய ஒரு பலம் உண்டாகும்.
குரு 12-ல் சஞ்சரிக்கக்கூடிய காலத்தில் தனது சிறப்பு பார்வையாக 4, 6, 8 ஆகிய ஸ்தானங்களை பார்ப்பார் என்பதால் எந்தவித எதிர்ப்பையும் எதிர்கொள்ளக்கூடிய பலம், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதுவும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய ஆற்றல் ஏற்படும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்: 5, 6, 8. நிறம்: பச்சை, வெள்ளை கிழமை புதன், வெள்ளி. கல்: மரசுதம் திசை: வடக்கு தெய்வம்: விஷ்ணு,
பரிகாரம்:
மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 10-ல் ராகு சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும் சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும் மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும் அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவதும் நல்லது. கேது 4-ல் சஞ்சரிப்பதால் விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது. சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ணமயமான போர்வை போன்ற வற்றை ஏழைகளுக்கு தானம் தருவது சர்ப சாந்தி செய்வது நல்லது. வரும் 1-5-2024 முதல் 12-ல் குரு சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது, கொண்டை கடலை மாலை சாற்றுவது, மஞ்சள்நிற ஆடைகள் அணிவது, மஞ்சள்நிற பூக்களைச் குடிகொள்வது, ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்குவது நல்லது.